வீட்டில் ஆளில்லாதப்போ கடாயில் வெந்த சிக்கன்! இருக்கு… டுவிஸ்ட் இருக்கு…

23 January 2021, 1:42 pm
Quick Share

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய இல்லத்தரசி ஒருவர், தனது வீட்டு கடாயில் சிக்கன் வெந்து கொண்டிருப்பதை கண்டு உறைந்து போயிருக்கிறார். போலீஸ் விசாரணையில் தான் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் மோனிகா கிரீன். இல்லத்தரசியான மோனிகா, தனது வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பாராம். சில நாட்களாக, அவர் வைத்த இடத்தில் பொருட்கள் இடம் மாறி இருப்பதும், வீடு அடிக்கடி அலங்கோலமாக மாறுவதும் கண்டு, குழம்பி போய் இருக்கிறார். தனது குழந்தைகள் தான் இதற்கு காரணம் என குழந்தைகளை கடிந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி, திங்கள் கிழமை, டாக்டர் ஒருவரை சந்திக்க வெளியே சென்றுவிட்டார். எதிர்பார்த்ததை விட இந்த சந்திப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே முடிய, வேகமாக வீட்டிற்கு திரும்பிவிட்டார். அப்போது வீட்டு கிச்சனில், கேஸ் ஸ்டவ் எரிந்து கொண்டிருந்து இருக்கிறது. கடாயில் சிக்கன் வெந்து கொண்டிருந்திருக்கிறது. பின்பக்க கதவும் திறந்திருக்கிறது. பயத்தின் உச்சிக்கு சென்ற அவர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பெரும் திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அந்த வீட்டின் மேல் சுவற்றின் சீலிங்கில், துளையிடப்பட்ட ஒரு ரகசிய இடம் இருந்திருக்கிறது. இதனை கண்டு அதிர்ந்த போலீசார், அங்கு சென்று பரிசோதித்ததில், அந்த இடத்தில் பல நாட்களாக ஒருவர் வசித்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. தன் வீட்டில் வசித்தது யார்? எதற்காக இங்கு வந்து வசித்திருக்கிறார் என குழப்பி போய் இருக்கிறார் மோனிகா. யாரா இருக்கும்…?

Views: - 7

0

0