கால்களை இழந்த நாய்களுக்கு மறுவாழ்வு! மகிழ்ச்சியில் சிட்டாய் பறந்த ஜிம்மிக்கள்!

6 February 2021, 5:48 pm
Quick Share

தாய்லாந்து நாட்டில் விபத்தில் கால்களை இழந்த நாய்களுக்கு மறுவாழ்த்து அளித்து, சக்கர வண்டி தயாரித்து பொருத்திய அறக்கட்டளைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாகன போக்குவரத்து அதிகரிப்பால், காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் என மக்கள் அல்லல்படும் வேளையில், பாவப்பட்ட ஐந்தறிவு ஜீவன்கள் பாடுதான் திண்டாட்டம். விபத்தில் அடிபட்டு இறக்கும் விலங்குகளுக்கு மத்தியில், சில விலங்குகள் அதிர்ஷ்டவசமாக கால்களை இழந்த உயிர்பிழைத்து விடுகின்றன. இப்படி, விபத்தில் கால்களை இழந்து நடக்கு முடியாமல் தவிக்கும் நாய்களை, தாய்லாந்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.

சோன்பூர் பகுதியில் அமைந்துள்ள ‘தி மேன் தட் ரெஸ்க்யூஸ் டாக்ஸ்’ என்ற அந்த அறக்கட்டளை, கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொண்டில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அப்படி விபத்தில் பறிபோன கால்களுடன் முடங்கிய நாய்களுக்கு, சக்கர வண்டி பொருத்தி ஜாக்கிங் செய்ய வைத்துள்ளது அந்த தொண்டு நிறுவனம். காலை நேரத்தில் சக்கர வண்டிகளை கட்டிக்கொண்டு, உற்சாகமாக ஜாக்கிங் செல்லும் இந்த வீடியோ, நெட்டிசன்களை மனதை கரைக்க, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள், தினமும் 600க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். பல நல்ல உள்ளங்கள் அளித்து வந்த நன்கொடையால் சிறப்பாக இயங்கி வந்த இந்த மறுவாழ்வு மையத்துக்கு, கொரோனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 40 சதவீதம் அளவிற்கு நன்கொடை குறைந்துள்ளது என அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Views: - 19

0

0