“ஆன்லைன் காதலி”யை,முதன் முதலாக பார்க்க 2ஆயிரம் கி.மீ பயணித்து சென்ற காதலன்… ஆனால் அங்கு நடந்ததே வேற….

14 January 2021, 10:01 pm
Quick Share

உ.பி மாநிலம் டியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சல்மான். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணை சந்தித்துப் பேசி பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் காதல் கோட்டை படத்தில் வருவது போலேவே பார்க்காமலேயே காதலித்து வந்துள்ளனர். இன்றைய டெக்னாலஜியில் விடியோ கால் இருப்பதால் அவர்கள் அதில் மட்டுமே பார்த்துப் பேசியுள்ளனர். ஒருமுறை கூட இவர்கள் நேரில் சந்தித்துக்கொண்டது இல்லை.

இந்நிலையில் அவர் ஆன்லைனில் காதலித்த பெண்ணிற்குக் கடந்த திங்கட்கிழமை பிறந்தநாள் வந்துள்ளது. அதனால் சரியாக ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு அந்த பெண்ணை அவரது வீட்டில் நேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தர அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் வீடு பெங்களூருவிலிருந்து சுமார் 2 ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள லக்னோவிற்கு அருகே உள்ளது. சல்மான், பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் லக்னோவிற்குச் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து அந்த பெண் இருக்கும் வீட்டை அடைந்துள்ளான். அந்தப்பெண்ணின் வீட்டின் அருகே சுற்றிவந்துள்ளான்.

அப்பொழுது இவன் அந்த வீட்டை நோட்டமிடுவதை அந்த பெண்ணின் பெற்றோர் கவனித்து போலீசிற்குச் சொல்லியுள்ளனர். போலீசார் அப்பகுதிக்கு வந்து சல்மானைப் பிடித்துச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பெண்ணும் அதைப் பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு முதன் முறையாக சல்மானை நேரில் பார்ப்பதால் அந்த பெண்ணிற்கு அடையாளம் தெரியவில்லை.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தான் அந்த வீட்டுப் பெண்ணுடன் சல்மானிற்கு இருந்த காதல் மற்றும் பிறந்தநாள் சர்ப்பிரைஸ் விஷயங்கள் எல்லாம் தெரியவந்துள்ளது. மேலும் சல்மான் அந்த பெண்ணிற்குப் பிறந்தநாள் பரிசளிக்க சாக்லேட்கள், டெடிபியர் உள்ளிட்ட பல பரிசுகளையும் வைத்திருந்தார்.இவை எல்லாம் போலீசரின் தீவிர “கவனிப்பிற்கு” பிறகு தான் வெளியே வந்துள்ளது.

அதன் பின் உண்மையை அறிந்த அந்த பெண்ணின் வீட்டார், சல்மான் மீது புகார் அளிக்கவேண்டாம் என முடிவு செய்ததால் சல்மான் விடுதலை செய்யப்பட்டார். ஆன்லைனில் காதலித்து அந்த காதலியின் பிறந்தநாள் அன்று சர்ப்பிரைஸாக கிப்ட் கொடுக்கச்சென்ற காதலனை போலீசார் பிடித்துச் சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 2

0

0