நாய்க்குட்டி போல வாத்துடன் விளையாடிய சிங்கம்! வைரல் வீடியோ

29 March 2021, 12:41 pm
Lion Duck - Updatenews360
Quick Share

சிங்கம் ஒன்று, நீரில் நீந்தும் வாத்தை, தனது கால்களால் அழுத்தி, நாயை போல விளையாடும் வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். இதற்கு உதாரணம் தான் டுவிட்டரில் பரவி வரும் இந்த வீடியோ. ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா, இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். இது ஒரு சிங்கத்திற்கும், வாத்திற்கும் இடையேயான சந்திப்பை காட்டுகிறது. சாதாரண சூழ்நிலையில், வாத்தை கண்ட சிங்கம் அதனை வேட்டையாடி சாப்பிட்டிருக்கும். ஆனால் இங்கு சூழ்நிலையே வேறு..

இந்த சிறிய வீடியோ கிளிப்பில், தண்ணீரில் நீந்தி வரும் வாத்தை, சிங்கம் ஒன்று காண்கிறது. அதன் அருகில் வந்த சிங்கம், தரையில் இருந்தவாறே வாத்தின் தலையை தண்ணீருக்கும் அமுக்கியும், தட்டியும் விளையாடுகிறது. தன்னை சிங்கம் தாக்க வருவதாக எண்ணிய வாத்து, தப்பித்து நீந்தி செல்ல பார்க்கிறது. ஆனால் சிங்கமோ விடாமல் வாத்துடன் விளையாடுகிறது. நாய் எப்படி விளையாடுமோ அப்படி இருக்கிறது சிங்கத்தின் அணுகுமுறை.

‘இவ்வளவு பெரிய மாமிச உண்ணிக்கு மென்மையான இதயம் இருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைத்திருந்தீர்கள்?’ என சுஷாந்தா இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். உண்மையில், இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கும், ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலைகளில், சிங்கத்தின் மென்மையான பக்கம் வெளிப்படும் என்று நெட்டிசன்கள் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த எல்லா காரணங்களுக்காகவும், வீடியோ வைரலாகியது.

மார்ச் 25 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 435 ரீடுவிட்களை பெற்றிருப்பதுடன், 2800க்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்திருக்கிறது.

Views: - 0

0

0