18 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன திருமண மோதிரம் திரும்பக் கிடைத்த அதிசயம்…

14 January 2021, 11:51 am
Ring - Updatenews360
Quick Share

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன ஒரு கணவரின் திருமண மோதிரம் மீண்டும் திரும்பக் கிடைத்த அதிசயம் சமீபத்தில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி டேவ் நேப்போளி – ரோஸானா நேப்போளி இவர்கள் இருவருக்கும் கடந்த 1993ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு டேவ் தன் மகனுடன் அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கையில் அணிந்திருந்த அவரது திருமண மோதிரம் காணாமல் போயுள்ளது.

அவர் கையில் அது லூசாக இருந்ததால் திடீரென காணாமல் போயுள்ளது. இருவரும் அப்பகுதியில் பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை அதனால் அவர்கள் வேறு வலியில்லாமல் புதிய மோதிரம் வாங்கிக்கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோஸானாவிற்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர் தன்னை ஜானி என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் ரோஸானாவின் குடும்ப விபரங்கள் குறித்துப் பல கேள்விகளைக் கேட்டார். இவர் ஏன் இதைக் கேட்கிறார் எனத் தெரியாமலேயே பதில் சொன்னார். பின்னர் அவர்கள் தொலைந்து போன மோதிரம் தன்னிடம் தான் இருப்பதாகக் கூறி அவர் அந்த தம்பதிகளிடம் ஒப்படைத்தார். 18 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மோதிரம் மீண்டும் திரும்பக் கிடைத்துள்ளதை நினைத்து அந்த தம்பதியினர் சந்தோஷத்தில் மூழ்கினர். மேலும் அந்த மோதிரத்தைக் கண்டெடுத்து அதை உரியத் தம்பதிகளிடம் கொடுத்த ஜானிக்கு நன்றி தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்பு தொலைந்து போன மோதிரம் எப்படி ஜானியின் கைக்குக் கிடைத்தது? அதை எப்படி ஜானி உரியவரிடம் ஒப்படைத்தார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.

Views: - 9

0

0