முதலையுடன் பேச்சு வார்த்தை நடத்திய முதியவர்.! வைரலாகும் விடியோ!!

27 January 2021, 11:39 am
Crocodile Talk - Updatenews360
Quick Share

முதலையுடன் முதியவர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச்சேர்ந்தவர் பங்கஜ், இவர் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த முதலையுடன் இவர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் விடியோ எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த சிலர் அவரிடம் முதலையிடம் இருந்து வந்துவிடுங்கள் தப்பி விடுங்கள் எனக் கூச்சலிட்டது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர் அந்த முதலையின் முன்பு குனிந்து வணக்கம் செல்வதும், அந்த முதலியை தன் தாய் என அழைப்பதும் மேலும் முதலையிடம் : “யாராவது கல்லை எடுத்து உன் மீது எறிந்தால் உன் மகன் (தன்னை குறிப்பிடுகிறார்) என் உயிரை கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றுவேன்” எனப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் பாசமாக அந்த முதலையில் முதுகைத் தடவி விட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த முதலை அவரை எதுவும் செய்யாமல் தண்ணீருக்குள் சென்றுவிட்டது.

இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைலரான நிலையில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளது. சிலர் அவரை பாராட்டிப் பதிவிட்டுள்ளனர். சிலர் அவர் முட்டாள் தனமாக செய்துள்ளதாக அவரை திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 17

0

0