ஆணின் நாக்கை கடித்து துப்பிய பெண் – அதற்குப்பின் நடந்தது தான் சோகம்

23 February 2021, 5:30 pm
Sea Gull - Updatenews360
Quick Share


சண்டையில் ஆணின் நாக்கை பெண் கடித்து துப்பியதை, அங்கிருந்த பறவை தூக்கிச்சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரத்தில், தெரு சண்டையில் ஈடுபட்டிருந்த ஆணின் நாக்கை கடித்து துப்பிய பெணணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த நாக்கை, திடீரென்று அங்கு வந்த பறவை தூக்கிச்சென்ற சம்பவம், அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், எடின்பர்க் நகரத்தின் தெருவில், ஜேம்ஸ் மெக்கன்ஸி மற்றும் பெத்தானி ரேயானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை, தெருவிலும் தொடர்ந்தது. வாய்ச்சண்டை முற்றவே, இருவரும் தெரு என்றும் பாராமல், கட்டிப்பிடித்து உருண்டனர். இதில் ஜேம்ஸை பழிவாங்க நினைத்த பெத்தானி ரேயான், ஜேம்ஸின் வாயோடு தனது வாய் வைத்து முத்தம் கொடுப்பது போன்று பாசாங்கு செய்து, ஜேம்ஸின் நாக்கை கடித்து துப்பினார்.

வாயில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த ஜேம்ஸிற்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அதிர்ச்சி, ஜேம்ஸிற்கு  மட்டுமல்லாது பெத்தானி ரேயான் மற்றும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை அளித்தது.
அது என்னவெனில், அந்த பகுதிக்கு திடீரென்று பறந்து வந்த பறவை ஒன்று, அந்த நாக்கை கவ்விக்கொண்டு பறந்து சென்றுவிட்டது. இந்த நிகழ்வு, அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பான வழக்கு, சமீபத்தில், எடின்பர்க் ஷெரீப் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேம்ஸ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பெத்தானி ரேயான், ஜேம்ஸை முத்தம் கொடுப்பதாக கூறி ஏமாற்றி, அவரது நாக்கின் 3 செ,மீ அளவை கடித்து துப்பிவிட்டதாக தெரிவித்தார்.

மாற்று நாக்கு கிடைக்காததால், ஜேம்ஸிற்கு இதுவரை அதுதொடர்பான அறுவை சிகிச்சை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 10

0

0