இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளீர்களா – இந்த 21 நாடுகளில் ஹாயாக டிரைவ் பண்ணலாம்..

1 March 2021, 5:14 pm
Quick Share

இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து உள்ளீர்களா… இந்த 21 நாட்களில் எவ்வித பயமும் இன்றி, அந்த நாட்டின் சாலைகளில் இனிமையான பயணம் மேற்கொள்ளலாம்.


ஜெர்மனி
ஜெர்மனியில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு, ஆறு மாதங்கள் கால அளவிற்கு நாம் பயணிக்கலாம். நமது டிரைவிங் லைசென்ஸை,ஜெர்மன் அல்லது ஆங்கிலத்தில் பிரதி எடுத்து வைத்துக்கொள்வது மிக முக்கியமானதாகும்.


யுனைடெட் கிங்டம்
இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு, ஸ்காட்லாந்து,இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உள்ளடக்கிய யுனைடெட் கிங்டமில், ஓராண்டு காலத்திற்கு நாம் பயணிக்கலாம்.


ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு 3 மாதங்கள் கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருத்தல் கட்டாயம்.


நியூசிலாந்து
பசிபிக் கடலில் அமைந்துள்ள சிறிய தீவான நியூசிலாந்தில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு கால அளவிற்கு வாகனங்களை ஓட்ட முடியும்.

சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டில் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு 3 ஓராண்டு  கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருத்தல் கட்டாயம்.

தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருத்தல் கட்டாயம். லைசென்ஸில், போட்டோ மற்றும் கையெழுத்து அவசியம் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
 
ஸ்வீடன்
ஸவீடன் நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருத்தல் கட்டாயம். லைசென்ஸ், ஆங்கிலம், ஸ்வீடிஷ், ஜெர்மன், பிரெஞ்சு அல்லது நார்வே மொழியில் இருக்க வேண்டும்.
 
சிங்கப்பூர்
சிங்கப்பூர் நாட்டில் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு  கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம்.
 
ஹாங்காங்
ஹாங்காங் நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு  கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம்.
 
மலேஷியா
மலேஷியா நாட்டின் சாலைகளில் பயணிக்க, இந்திய டிரைவிங் லைசென்ஸ், ஆங்கிலம் அல்லது மலாய் மொழிகளில் இருத்தல் அவசியம். இந்த லைசென்ஸ்கள், மலேஷியாவில் உள்ள இந்திய தூதகரங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
அமெரிக்கா
அமெரிக்காவில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருத்தல் கட்டாயம்.
 
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், பிரெஞ்சு மொழியில் இருத்தல் கட்டாயம்.
 
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில்,இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டலாம்
 
பூடான்
இந்தியா உடன் நல்ல உறவை பேணி வரும் பூடான் நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை கொண்டு நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, இருசக்கர வாகனங்களையும் ஓட்டி மகிழலாம்.
 
பின்லாந்து
உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தில், இந்திய டிரைவிங் லைசென்சை கொண்டு, ஓராண்டு கால அளவிற்கு வாகனங்களை இயக்கலாம். ஆனால், அந்நாட்டின் மருத்துவ காப்பீடை பெற்றிருத்தல் கட்டாயம்.
 
மொரீசியஸ்
மிகச்சிறிய தீவு நாடான மொரீசியஸில், ஒரே ஒரு நாள் மட்டும், இந்திய டிரைவில் லைசென்ஸை கொண்டு வாகனங்களை இயக்கலாம்.
 
இத்தாலி
 
இத்தாலி நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை, சர்வதேச டிரைவிங் பெர்மிட்டுடன் இணைத்த பிறகு, அங்கு நாம் வாகனங்களை ஓட்டி மகிழலாம்.
 
அயர்லாந்து
அயர்லாந்து நாட்டில் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கபட்ட டிரைவில் லைசென்ஸ்ககளை கொண்டு வாகனங்களை ஓட்டி மகிழலாம்.
 
நார்வே
நார்வே நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஓராண்டு  கால அளவிற்கு வாகனங்களை ஓட்டலாம்.
 
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டலாம். லைசென்ஸ், ஆங்கில மொழியில் இருப்பது கட்டாயம்.
 
கனடா
கனடா நாட்டில், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொண்டு  வாகனங்களை ஓட்டலாம். அங்கு வலதுபக்க டிரைவிங் நடைமுறையில் உள்ளது.

Views: - 7

0

0