புலியை போட்டோ எடுக்க முயற்சி: அடுத்து என்ன நடக்கிறது பாருங்கள்!

27 January 2021, 8:40 pm
Quick Share

புலியை கண்ட சுற்றுலா பயணிகள் அதனை போட்டோ எடுக்க முயற்சிக்கும் போது, அது திடீரென அவர்கள் அருகில் வந்து கர்ஜித்து விட்டு சென்றது. மயிர் கூச்செரிய செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காடுகளிலும், வனவிலங்குகளிடமும் முட்டாள்களாக நடந்து கொள்பவர்கள், உயிருடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருத வேண்டும். ஹார்ட் அட்டாக் வரவழைக்கும் வீடியோ ஒன்றை, இந்திய வன சேவை அதிகாரி சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரு ஜீப்களில், சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். திடீரென புலியை பார்த்த அவர்கள், தங்களது மொபைலில் போட்டோ எடுக்க ஆர்வம் கொள்கிறார்கள்.

அது எங்கே? என ஒருவர் ஹிந்தியில் கேட்க, புலியை தேடி கேமரா கண்கள் அலைகின்றன. அப்போது திடீரென, வண்டியின் அருகில் இருக்கும் சுவற்றில் புலி தாவிக் குதித்து நிற்கிறது. அப்போது அவர்களது ஆச்சரியம் பயமாக தொற்றிக் கொள்கிறது. சில அடி தூரத்தில் புலியை பார்த்த அவர்கள் பீதியில் உறைந்து நிற்க, புலி அவர்களை ஒன்றும் செய்யாமல், அமைதியாக சென்று விட்டது.

‘முட்டாள்கள்.. மனித மூளை வேலை செய்யாத போது, வாய் பேசும்.. கோபத்தை கட்டுப்படுத்திய புலிக்கு வாழ்த்துக்கள்.. ஆனால் எதிர்காலத்தில் இதனை உறுதியாக சொல்ல முடியாது’ என அவர் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார். 24 மணி நேரத்தில் இந்த வீடியோவை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் சுற்றுலா பயணிகளின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே வனவிலங்கு தொடர்பான மற்றொரு வீடியோவும், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமன், அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். காட்டில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை, புலி ஒன்று எடுத்து செல்கிறது. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த கவலைகளை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

Views: - 0

0

0