ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை “வழிப்பறி” செய்த திருடர்கள்…

27 January 2021, 11:11 am
Swiggy - Updatenews360
Quick Share

ஸ்வீகியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை சிலர் வழிப்பறி செய்து திருடிச்சென்ற சம்பவம் சமீபத்தில் உ.பியில் நடந்துள்ளது.

இன்று தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டது. வீட்டில் போன் மூலம் ஆர்டர் செய்தாலே உணவுகள் வீடுதேடி வருகிறது. நகரங்களில் இந்த மாதிரியாக ஸ்வீகி மற்றும் சோமாட்டோ போன்ற நிறுவனங்களின் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்த வகையான ஆன்லைன் உணவு ஆர்டர்களில் பல்வேறு குழப்பங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி பாய் நடுரோட்டில் சாப்பிட்ட வீடியோ முதல் ஆர்டர் டெலிவரி செய்ய சென்ற நபர் ஒரு பெண்ணிற்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு அளித்தது என பல சம்பவங்கள் செய்திகளாகிவிட்டன. அந்த வகையில் தற்போது ஒரு ருசீகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன் படி உ.பி மாநிலம் நொய்டாவை சேர்ந்த சாணக்யதாஸ் என்பவர் ஸ்வீகி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த சிறிது நேரம் கழித்து அவர் ஆர்டர் செய்த உணவு திருடு போய் விட்டது எனவும், அதனால் அவர் ஆர்டர் கேன்சல் செய்யப்படுகிறது எனவும், அவர் வேறு உணவகத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் அவருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதை ட்விட்டரில் பகிர்ந்த அவர் “திருடப்பட்டுவிட்டதாம், நொய்டாவில் இப்படியெல்லாமா நடக்கிறது” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதற்கிடையில் சாணக்யதாஸ் மற்றொரு ட்வீட்டில் தனக்கு ஸ்வீகி நிறுவனத்திலிருந்து போன் வந்ததாகவும், அதில் அவர்கள் தனக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபரை சிலர் கடுமையாக தாக்கிவிட்டு உணவை திருடிச்சென்றதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் உணவு சிலர் வழிப்பறி செய்து திருடிச்சென்ற சம்பவம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

Views: - 0

0

0