ஆட்டோ ஓட்டும் 21 வயது இளம்பெண்! உத்வேகம் தரும் பின்னணி

14 January 2021, 6:54 pm
Quick Share

கொரோனாவால் உலகின் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், தனது குடும்பத்துக்கா காஷ்மீரை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஆட்டோ ஓட்டி, அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பஞ்ஜித் கவுர். கொரோனாவால் குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட, ஆட்டோ ஓட்டி வருகிறார். பன்ஜித்தின் தந்தை சர்தார் கோரக் சிங், பள்ளி டிரைவராக இருந்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட, தனது வேலையை அவர் இழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தை காக்க, ஆட்டோ ஓட்ட துவங்கியுள்ளார்.

அவருக்கு பெரிய அளவில் வருமானம் வராததால், ஆட்டோ ஓட்ட முடிவு செய்த பன்ஜித், தந்தைக்கு உதவ முன்வந்து, தானே ஆட்டோ ஓட்ட துவங்கி உள்ளார். இருப்பினும் அவர் தனது படிப்பை கைவிடவில்லை. தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவர், எதிர்காலத்தில் பாதுகாப்பு படையில் சேர இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பன்ஜித்தின் சகோதரி தேவிந்தர் கவுரும் ஆட்டோ ஓட்ட தெரியும். தனது சகோதரி அடுத்தவர்களுக்கு முன்னுதராணமாய் இருப்பதில் தேவிந்தர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பஞ்சித்தின் தந்தைக்கும் மகளை நினைத்து பெருமிதம். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க முடியும். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யலாம்’’ என்றார். இந்த 21 வயது இளம் பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Views: - 7

0

0