லெமன் ஜூஸ் விற்று நிதி திரட்டிய 7 வயது சிறுமி! எதற்கு தெரியுமா?

Author: Udhayakumar Raman
9 March 2021, 9:54 pm
Quick Share

பிரிட்டனில் பெருமூளை பாதிப்புக்குள்ளான 7 வயது சிறுமி ஒருவர், தனது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை, லெமன் ஜூஸ் விற்று நிதி திரட்டி உள்ளார். அவர் உடல் நலம் பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பிரிட்டனில் உள்ள அலபாமாவில் வசிக்கும் எலிசபெத் ஸ்காட். கணவரை இழந்த இவர், பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். அவரது 7 வயது மகள் லிசா ஸ்காட். இவர் கடந்த ஆண்டு கோடை காலத்தில், தனக்கு தேவையான பொம்மைகள், காலணிகள் வாங்க தேவையான பணத்துக்காக, அம்மாவின் பேக்கரியில் லெமன் ஜூஸ் கடை ஒன்றை நிறுவினார். அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து வந்தார். இந்நிலையில், ஜனவரி மாதம் அவரது பெருமூளையில் பாதிப்பு இருப்பது தெரிவந்தது.

இருமுறை மயக்கம் அடைந்து விழுந்த அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்ற போது, லிசாவின் பெருமூளை செயலிழந்து வருவதை டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். விரைவில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து தாய் சமூக வலைதளங்கள் வாயிலாக நிதி திரட்ட, லிசாவோ, தனது லெமன் ஜூஸ் கடையில் நிதி திரட்டி இருக்கிறார்.

இவரது நிலையை அறிந்து பலரும் 10, 20, 100 டாலர் வரை நன்கொடை அளித்துள்ளனர். இவ்வாறாக லிசா மட்டும் 12 ஆயிரம் டாலர் நிதி திரட்டி உள்ளார். தற்போது வரை அவரத சிகிச்சைக்கு 3 லட்சம் டாலர்கள் நிதி சேர்ந்துள்ளது. விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என அவரது அம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லிசா கூறுகையில், ‘‘அறுவை சிகிச்சை குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் சிறிது பயமாக இருக்கிறது’ என்றார்.

Views: - 193

0

0