நாய் என நினைத்து எலியை வளர்த்த சீனர்! எப்படி தெரிந்தது தெரியுமா?

22 January 2021, 8:17 pm
Quick Share

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், நண்பன் வீட்டிற்கு சென்றிருந்த போது, கறுப்பு நாய் குட்டி ஒன்றை எடுத்து வந்து வீட்டில் வளர்த்திருந்திருக்கிறார். 3 நாட்களுக்கு பின் தான், அவர் கொண்டு வந்தது நாய் அல்ல; எலி என தெரிந்திருக்கிறது. செம காமெடியாகி போன தனது செயலை அவர் சமூக வலைதளங்களில் பகிர அது வைரலானது.

கண்களால் காண்பது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவத்தை படித்தால், கண்டிப்பாக சிரிப்பை உங்களால் அடக்க முடியாது. இதுகுறித்து சீனர் ஒருவர் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதில், தான் ஏமாந்தது போல் யாரும் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார். அப்படி என்ன தான் இருக்கிறது அதில் தெரியுமா?

அந்த சீனர் தனது நண்பரை காண மலை பிரதேசத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து கிளம்பும் போது வீட்டிற்கு வெளியே கொழு கொழுவென ஒரு குட்டி கருப்பு நாய் ஒன்றை கண்டிருக்கிறார். அதனை வளர்க்க எண்ணிய அந்த சீனர், தன் வீட்டிற்கு தூக்கி வந்து விட்டார். ஆனால் அந்த குட்டியின் நடவடிக்கை நாயின் குணத்துடன் ஒத்துப்போகவில்லை. 3 நாட்களுக்கு பின் தான் அவர், தான் கொண்டு வந்தது நாய் அல்ல என கண்டுபிடித்திருக்கிறார்.

இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இந்த மிருகத்திடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். அந்த வினோத மிருகத்தை கண்டவர்கள் முதலில் திகைப்படைந்தார்கள். ஏனெனில் அது பார்க்க நாய் குட்டி போன்றே இருக்கிறது. அதில் சிலர், இது மூங்கில் எலி தான் கருத்து பதிவிட்டனர். பின்பு தான் அவருக்கு இது ஒருவகை எலி என தெரிந்திருக்கிறது. என்ன குமாரு.. சிரிப்ப அடக்க முடியலேல…

Views: - 6

0

0