வீட்டில் சும்மா ஷூ அணிந்து அமர்ந்தால் ரூ4 லட்சம் சம்பளம்…. எங்குத் தெரியுமா?

14 January 2021, 6:26 pm
Quick Share

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஷூ அணிவதற்காக ரூ4 லட்சம் சம்பளத்துடன் வேலை ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தால் வங்கியில் பணம் ஏறிக்கொண்டிருக்க வேண்டும் என ஆசை எந்த மனிதனிற்குத் தான் இல்லை. அந்த விஷயம் நடக்காது என்றாலும் அப்படியான ஆசை மனதிற்குள் அனைவருக்கும் இருக்கும். இனி அந்த ஆசை நடக்காது எனச் சொல்ல முடியாது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வீட்டில் சும்மா இருப்பவர்களுக்குச் சம்பளம் வழங்குகிறது. அவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை அந்நிறுவனம் தரும் காலணியை 12 மணி நேரத்திற்கு அணிந்திருக்க வேண்டும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெட்ரூம் அத்லெடிக்ஸ் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் காலியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் “ஸ்லிப்பர் டெஸ்டர்” என்ற பதவிக்காக அந்த இடத்தை அறிவித்துள்ளது. இந்த பதவி ஒரு ஆணிற்கும் ஒரு பெண்ணிற்கு மட்டும் வழங்கப்படும். அவர்கள் இந்நிறுவனம் தரும் ஷூக்களை 12-24 மணி நேரம் வரை அணிந்திருக்க வேண்டும். இந்த பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு 12ஷூக்கள் இலவசமாக வழங்கப்படும். அவர்கள் அந்த ஷூக்களை பயன்படுத்தி அது குறித்த ரிவியூ சொன்னால் போதும்.

இந்த பணிக்காக அந்நிறுவனம் ஆண்டிற்கு ரூ4 லட்சம் சம்பளமும் அளிக்கிறது. இந்தப்பணியில் இருப்பவர்கள் மாதம் இரண்டு நாட்கள் ரிவியூ சொல்வதற்காக அழைக்கப்படுவார்கள். தற்போது இந்த பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. யார் இந்த பணிக்குத் தேர்வாகப்போகும் அதிர்ஷ்டசாலி என்பது தான் தெரியவில்லை.

Views: - 4

0

0