காதலர் தினத்தில் இலவச விவாகரத்து; சட்ட ஆலோசனை மையம் நூதன ஆஃபர்

5 February 2021, 7:21 pm
Quick Share

காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என சட்ட ஆலோசனை மையம் நூதன ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் காதலர் தினம் காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையே வணிகர்களுக்கு கொண்டாட்டம் தான். காதலர் தினத்தன்று காதலர்களை ஈர்ப்பதற்காக வணிகர்கள் பலர் தங்கள் நிறுவனத்தில் காதலர் தின சிறப்பு சலுகை, தள்ளுபடி, பரிசு என வித விதமான ஆஃபர்களை அள்ளி குவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு சட்ட ஆலோசனை மையம் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திருமணமான தம்பதிகளுக்கு இலவசமாக விவாகரத்து பெற்றுத்தரப்படும் என அறிவித்துளு்ளது.

இதற்காக விவாகரத்து பெற விரும்பும் தம்பதியினர் தங்களுக்குள் என்ன பிரச்னை ஏன் விவாரத்து வாங்க வேண்டும் என்பதை முதலில் ஒரு இமெயிலில் குறிப்பிட வேண்டும், அ, அவ்வாறு வரும் இமெயில்களை ஆய்வு செய்து அதில் சரியான காரணங்களுக்காக பிரிய நினைக்கும் ஒரு தம்பதியை அந்த சட்ட ஆலோசனை மையம் தேர்வு செய்யும், அவர்களக்கு இலவசமாக அந்த மையம் விவாகரத்து பெற்று தரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு எந்த விதமான மறைமுக கட்டணமும் கிடையாது, அதே நேரத்தில் கோர்ட் கட்டணமும் சட்ட ஆலோசனை மையம் மூலமாகவேகட்டப்படும். என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. காதலர் தினத்தன்று ஆஃபராக திருமணமான தம்பதிகளை பிரிக்கும் விதமாக சட்ட ஆலோசனை மையம் ஒன்று ஆஃபரை அறிவித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0