30 விநாடியில் முழு சுவருக்கும் பெயிண்ட் – வைரல் ஆகும் வீடியோ

3 February 2021, 5:20 pm
Quick Share

ஒரு சுவரை, 30 விநாடி காலஅளவில், ஒருவர் பெயிண்ட் Fடிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, பலரும் வீடுகளில் முடங்கி இருந்தபோது வித்தியாசமான பல்வேறு செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதில் பலரது செயல்கள் மிகுந்த வரவேற்பும் பெற்றது. ஆனால், வீட்டை அலங்கரிக்கும் பொருட்டு, வீட்டின் சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை மிக சவாலானது என்று பலரும் நினைத்திருந்த நிலையில், ஒரு சுவரை, 30 வினாடிகளில் ஒருவர் பெயிண்ட் அடிக்கும் வீடியோ, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்து உள்ளதோடு மட்டுமல்லாது, விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

ஏஞ்சலா ஜே அபிசியல் என்ற டிக்டாக் ஐடியில், ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு, அவர் How on earth is this even possible? என்று தலைப்பு இட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அவர் முதலில், மஞ்சள் நிறத்தை ஜிக் ஜாக் வடிவில் அந்த சுவற்றில் அடிக்கிறார். பின் சுவற்றின் இறுதிப்பகுதிக்கு வந்ததும், வெள்ளை பெயிண்டை கொண்டு, அந்த மஞ்சள் நிறத்தின் மீது அடித்து, அந்த சுவற்றை வெள்ளை நிறத்திற்கு மாற்றி விடுகிறார்.
29 விநாடிகள் காலஅளவிற்கு ஓடும் இந்த வீடியோவை கண்டு பலர் ஆச்சர்யம் அடைந்துள்ளது மட்டுமல்லாமல், அதை வைரலாக்கி பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த வீடியோவை நம்ப முடியவில்லை என்று சிலரும், இந்த வீடியோ முழுவதுமாக ரிவர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது என்றும், பாஸ்ட் பார்வர்ட் முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது சாத்தியமான ஒன்று தான் என்றும், தனது கணவர் இதேபோன்று சுவருக்கு பெயிண்ட் அடிப்பார் என்று பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ரோலரில் அதிக உறுதியான பெயிண்ட் நிரப்பப்பட்டிருக்கும். அப்போது தான், ரோலர் அடிக்கும் அதே நொடியில், சுவரில் பெயிண்ட் ஒட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0