தினமும் நாய் உச்சாவை குடிக்கும் இளம் பெண்.. எதுக்கு தெரியுமா..

14 January 2021, 4:15 pm
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், வினோத காரணத்துக்காக தினமும் நாய் மூத்திரத்தை குடித்து வருகிறார். ஏன் என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறதல்லவா.. அவர் என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா..

இந்தியாவில் பசுவின் சிறுநீர், புனிதமாக கருதப்படுகிறது. நோயை குணமாக்கும் என நம்பும் சிலர், அந்த கோமியத்தை குடித்து வருகின்றனர். ஆனால் அது உண்மை என்பதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த லீனா என்ற இளம் பெண்ணும், ஒரு காரணத்துக்காக விலங்கின் சிறுநீரை தினமும் குடித்து வருகிறார். அவர் குடிப்பது கோமியம் அல்ல; அவரது செல்ல நாயின் சிறுநீரை.

லீனாவுக்கு அதிகம் முகப்பருக்கள் இருந்ததாம். பல வழிகளில் முயற்சித்தும் அதற்கு தீர்வு காண முடியவில்லை. நாயின் சிறுநீர் குடித்தால் மேனி பளபளக்கும் என யாரோ ஒருவர் கூற, அதனை முயற்சித்து பாரத்தால் என்ன முடிவு செய்து, தான் வளர்க்கும் நாயின் சிறுநீரை குடித்திருக்கிறார்.

இதுகுறித்து லீனா கூறியதாவது: நாயின் சிறுநீரில், வைட்டமின் ஏ, வைட்டமின் இ மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்து உள்ளன. இதனை குடிப்பதால் கேன்சர் வராது. முதல்முறை சிறுநீரை குடித்த போது, சிறிது பயம் இருந்தது. போகப்போக அது பழகிவிட்டது. சிறுநீர் குடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே என் முகப்பருக்கள் மறைந்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார். அவர் கிளப்பிய இந்த புதிய பூதம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது..

Views: - 6

0

0