இது ஒரு ‘முக்கோண’ காதல்.. அதுவும் ஒரே வீட்டில்.. ஐயே…

15 January 2021, 4:35 pm
Quick Share

ஒரே வீட்டில், ஒரு பெண்ணும் இரு ஆண்களும் இணைந்து, ‘அவனுக்கு அவள்’, ‘அவளுக்கு அவன்’, ‘அவனுக்கு அவன்’ என ‘முக்கோண’ காதலில் விழுந்து ஒன்றாக குடும்பம் நடத்தி தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இது நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. சந்தோஷமா தான் இருக்காங்களாம் பா…

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது கப்புள்ஸ். அதுவே ஒரு ஆண் இரு பெண்கள் அல்லது இரு ஆண்கள் ஒரு பெண் சேர்ந்து, முக்கோண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களுக்கு ‘டிரப்பிள்’ என்று பெயர். அப்படி ஒரு ‘டிராப்பிள்’ ஜோடி தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்திருப்பது அமெரிக்காவில்.

அமெரிகாவின் சியாட்டில் நகரில் பிரின்சிஸ் லாலி என்ற பெண்ணும், கன்தெர் மற்றும் லெப்சிசுவான் என்ற இரு ஆண்களும் ‘டிராப்பிள்’ ஆக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர். லாலியும் கன்தெரும் மலர் கண்காட்சி ஒன்றில் சந்தித்து நண்பர்களாகி உள்ளனர். பின் நட்பு காதலாக மலர்ந்தது. இவர்கள் இணைந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் கண்களுக்கு பட்டார் லெப்சுவான்.

லெப்சுவான் மீது அவர்கள் இருவருக்கும் காதல் வந்துள்ளது. அதாவது, லாலியும், கன்தெரும் தனித்தனியாக அவர் மீது விரும்பம் கொண்டுள்ளனர். இதனை அவரிடம் இருவரும் தெரிவிக்க, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம் கன்தெர். (என்ன கருமம்டா இதுனு நினைக்கிறீங்களா)

தற்போது ஒரே வீட்டில் ‘ஒன்றாக’ வசித்து வரும் அவர்கள், தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தங்களுடன் நான்காவதாக யாரும் ‘இணைய’ விரும்பினால், இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தற்போது இந்த விவகாரம் தான், இணையத்தில் ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருக்கிறது. 90ஸ் கிட்ஸ் வயிறு எரிஞ்சா நாங்க பொறுப்பு இல்ல..!

Views: - 5

0

0