தாயுடன் விளையாடி மகிழும் குட்டிப்புலி! வைரல் வீடியோ
1 February 2021, 4:03 pmதாய் புலியுடன் அதன் குட்டி கட்டிப்பிடித்து பாசமழை பொழிந்து விளையாடும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
தாயின் அரவணைப்பு தான் குழந்தைக்கு கிடைக்கும் மிகப் பெரும் சொத்து. தாயின் மடியில் தவழ்ந்து மகிழும் குழந்தைகளை கண்டால், நமக்கு ஆனந்தம் பொங்குவது இயற்கை. யார் என்றே தெரியாத குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்வோம். அப்படி தனது தாயுடன் விளையாடி மகிழும் குட்டி புலி ஒன்று தான், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மனதை இளக்கும் அந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தாயின் அரவணைப்பு தான் உண்மையான மகிழ்ச்சி’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். 30 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், தாய் புலியுடன் அதன் குட்டி கட்டி புரண்டு விளையாடுகிறது. மேலும் தாயை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்கிறது. இந்த குட்டிபுலியின் சுட்டித்தனத்தை ரசித்து, கமெண்ட் பாக்ஸில் தாய்மை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
‘தாயின் அரவணைப்பு போல் எதுவும் கிடையாது; அது உண்மையான சொர்க்கம்’ என ஒருவர் கருத்து பதிவிட, மற்றொருவர், ‘இதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 18.5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 2.2 ஆயிரம் லைக்ஸ் மற்றும், 269 பேர் இதனை ரீடுவிட் செய்துள்ளனர். தாய்மை தான் வரம்! உண்மைதானே!
0
0