லைவ்வில் வானிலை அறிக்கை வாசித்த அம்மா; குறுக்கே வந்த கவுசிக்..!

1 February 2021, 4:58 pm
Quick Share

செய்தி சேனல் ஒன்றில் நேரலையாக வானிலை அறிக்கையை பெண் ஒருவர் வாசித்து கொண்டிருந்த போது, அவரது கைக்குழந்தை, ‘குறுக்கே இந்த கவுசிக் வந்தா’ என ஸ்கிரீனுக்குள் வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கம்பெனிகள் அனைத்தும் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுத்தின. கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட போதும், தற்போதும், ஊழியர்கள் பலரும் தங்கள் வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். ஐடியில் பணி புரிபவர்கள் மட்டுமன்றி, செய்தி சேனல்களில் வேலை செய்பவர்களும் வீட்டில் இருந்தே செய்திகளை வாசித்து வருகின்றன. பலரும் இதனை என்ஜாய் செய்ய, கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்களின் நிலை தான் திண்டாட்டமாக மாறி உள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களும் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில், நேரலையில், வானிலை அறிக்கை வாசிக்கும் ஒரு பெண்ணின் கைக்குழந்தை செய்த காரியம் இணையதளவாசிகள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. பத்திரிக்கையாளராக இருக்கும் லெஸ்லி லோபஸ் என்பவர், செய்தி சேனலுக்கு நேரலையில் வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கைக்குழந்தை, ஸ்கிரீனுக்குள் வந்து விடுகிறது. நிலைமையை சமாளிக்க, தனது கைக்குழந்தையை அரவணைத்தபடி, அவர் வானிலை அறிக்கையை வாசித்து முடிக்கிறார். மேலும், இனி எனது மகன் நடக்க ஆரம்பித்து விடுவான். நான் எனது கட்டுப்பாடுகளை இழந்து விட்டேன் என்றார். தற்போது அந்த நிகழ்ச்சியின் ஸ்டாக அந்த குழந்தை மாறி உள்ளது.

அந்த வீடியோவை, அந்த செய்தி சேனலில் பணியாற்றும் பிராண்டி ஹிட் என்பவர் தனது டுவிட்டரில் பகிர, சுமார் 2 மில்லியன் பேர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தாய் – மகஜ் அன்பு குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், செய்தி வாசிப்பாளர் ஒருவரின் முன்பல் ஒன்று, நேரலையின் போது வாயிலிருந்து கீழே விழுந்தது. அதனை எடுத்து வைத்து சமாளித்தபடி, அவர் செய்தியை வாசித்து முடித்தார். அந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0