ராமர் கோவில் கட்ட நிதியை வாரி வழங்கும் திருநங்கைகள்! எவ்வளவு தெரியுமா?
30 January 2021, 4:32 pmஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக திருநங்கைகள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். மேவார் பகுதியை சேர்ந்த ரேகா பூஜி என்ற திருநங்கை ரூ.5,111,11 நன்கொடையும், கிரான்பாய் என்பவர் ரூ.3,21,000 நன்கொடையும் அளித்திருந்த நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த திருநங்கைகள் அமைப்பு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. மனிதனாகப் பிறந்து அனைவரும் போற்றும் கடவுளாக மக்களின் மனதில் வாழ்பவர் ராமர். அவருக்கு கோவில் எழுப்பும் புனித பணியில் அனைவருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதால் பொதுமக்களிடமும் நிதி பெறப்படுகிறது. விஐபி.க்கள் அதிகளவு நிதி தந்த போதும், ஏழை எளிய மக்கள், தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநங்கைகளும் புனித ஆலயம் கட்ட நிதி அளித்து வருகிறார்கள். ராமர் கோவில் கதையில் தாங்களும் ஒரு அங்கத்தினராக இருக்க வேண்டும் என நினைத்துள்ள அவர்கள், ராமர் தங்களுக்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கையுடன் நிதியை வாரி வழங்கி வருகிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த 20 திருநங்கைகள் கொண்ட அமைப்பு ஒன்று, ராமர் கோவில் கட்டுமான பணிக்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். இது தங்களின் வாழ்க்கையில் ஒரு உணர்ச்சிகரமான தருணம் எனவும் உணர்ச்சி பெருக்குடன் கூறினர்.
இவர்கள் தவிர, மேவார் பகுதியை சேர்ந்த திருநங்கை ரோக பூஜி என்பவர் ரூ.5,111,11 நன்கொடையும், பியோவரை சேர்ந்த மற்றொரு திருநங்கை கிரான்பாய் ரூ.3,21,000 நன்கொடையும், ராஜ்சமண்டில் உள்ள சர்பூஜாவைச் சேர்ந்த மம்தா என்பவர் ரூ.1,51,000 நன்கொடையும் வழங்கி உள்ளார். தவிர கும்ஹெரைச் சேர்ந்த திருநங்கை ரியா குமாரி ரூ.1,01,000 மற்றும் சன்வாரியாஜியைச் சேர்ந்த திருநங்கை ஆர்த்தி, ரூ.51,000 நன்கொடை அளித்துள்ளனர். அயோத்தி தீர்ப்புக்காக தாங்கள் ஆவலுடன் காத்திருந்ததாகவும், தற்போது ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர் அதனை காண ஆவலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
0
0