முதலைகளின் உண்மை காதல்! உருகும் நெட்டிசன்கள்

21 January 2021, 1:38 pm
Quick Share

முதலை ஜோடிகள் ஒன்று, காதலுடன் உருகி நீரில் நீந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அவற்றின் காதல் பல்லாண்டு காலம் வாழ நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் பெரும்பாலும் இனச்சேர்க்கையை மட்டுமே எதிர்பார்க்கும். இதற்காக எதிர்பால் விலங்கை கவர்ந்து, இனப்பெருக்கம் செய்வது மட்டுமே அதன் பெரிய குறிக்கோளாக இருக்கும். அத்தி பூத்தாற்போல, அவைகளுக்குள் காதல் மலரும். அப்படி ஒரு காதல் தான் இந்த முதலைகளுக்குள் உண்டாகி உள்ளது. இரு முதலைகள் காதலுடன் நீரில் நீந்தி வரும் அந்த காட்சியே கூறும் அவைகளுக்குள் இருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்று..!

இந்த புகைப்படத்தை, ஆஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் மறைந்த விலங்குகள் பாதுகாவலர் ஸ்டீவ் இர்வினின் மகள் ஸ்பிண்டி இர்வின் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஒன்றாக நீந்தும் தம்பதியர்கள்.. நீங்கள் ஒன்றாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோ, டுவிட்டரில் 4.5 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. 267 பேர் ரிடுவிட் செய்துள்ளனர். பலரும் இதய வடிவ எமோஜிகளை பதிவிட்டு அவற்றின் காதலை வாழ்த்தி வருகின்றனர்.

அந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் மற்றொரு நபர் ஸ்வான்களின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மூன்று அழகான ஸ்வான்கள் ஒரு ஏரியின் அருகே நடந்து வந்து தங்கள் உணவை எடுக்கும் காட்சிகள் அடங்கி உள்ளன. இதுவும் ஆஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது எனக் கூறும் அந்த பயனர், இந்த ஸ்வான்கள் திருமண பந்தத்தில் வாழ்கின்றன என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கும் லைக்ஸ்கள் குவிகின்றன.

Views: - 3

0

0