வாயா தொறந்தா பொய் தான் வரும்! ‘அண்டபுழுகன்’ டிரம்ப்பை கழுவி ஊற்றும் ஊடகங்கள்

25 January 2021, 4:11 pm
Quick Share

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நான்கு ஆண்டுகளால ஆட்சியின் போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை கூறியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். புதிய ஜனாதிபதிக்காக நடந்த தேர்தலில், ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தபோதும், ஆட்சியை விட்டுதர மறுத்து, பெரிய களேபரம் ஆனது, உலகம் முழுவதும் கேலிக்கு உள்ளானது. இந்நிலையில், டிரம்ப் தனது பதவி காலத்தின் போது, கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்து, அமெரிக்க ஊடகங்கள் ஆய்வு செய்துள்ளன. அப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 30 ஆயிரத்து 573 பொய்களை கூறியுள்ளார் என தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்ற முதல் ஆண்டில் மட்டும் தினமும் 6 பொய்களை சராசரியாக அவர் கூறியிருக்கிறாராம். அதுவே இரண்டாவது ஆண்டில் 16 ஆக உயர்ந்திருக்கிறதாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்த பொய்களின் எண்ணிக்கை, 3வது ஆண்டில் தினமும் 22 பொய்கள், 4வது ஆண்டில் 39 பொய்களை அவர் கூறியிருக்கிறார். இப்படியாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 30,573 பொய்களை கூறியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும், அவர் 800 பொய்களை கூறி, அண்டப்புழுகனாக மாறியிருக்கிறாராம்.

பதவி வகித்தபோது, டிரம்ப் தனது அலுவலக மேஜையில், சிவப்பு பட்டன் ஒன்றை பொருத்தியிருத்த டிரம்ப், அது தான் அணு ஆயுதங்களை ஏவும் பட்டன் என அள்ளிவிட்டது, பைடன் பதவியேற்றவுடன் வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரிக்கப்பட்டது. என்னய்யா இந்த மனுஷன் வாயில உண்மையே வராதா என கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Views: - 11

0

0