நீ பெருசா.. நான் பெருசா.. சண்டையிட்ட புலிகள்! வைரல் வீடியோ

24 January 2021, 6:37 pm
Quick Share

காட்டுப்பகுதி ஒன்றில் இரு புலிகள் கடும் சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘டைட்டன்களின் மோதல்’ என்ற தலைப்பிட்ட இந்த வீடியோவில் புலிகள் ஆக்ரோஷமாக ஒன்றை ஒன்று தாக்கி கொள்கின்றன.

ஒரே இனத்தை சேர்ந்த இரு காட்டு விலங்குகள் சண்டையிட்டு கொள்ளும் காட்சியை காண்பது அபூர்வம். பெரும்பாலும் அவை தங்களுக்குள் நட்பு பாராட்டி கொள்ளும் நிலையில், இரண்டு புலிகள் தங்களுக்குள் கடும் சண்டையிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஐஎப்எஸ் அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

‘டைட்டன்களின் மோதல்’ என என பெயரிட்டு டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், காட்டுப்பகுதி ஒன்றில், நல்ல பழகிய நண்பர்களை போல, இரு புலிகள் அருகருகே நடந்து வருகின்றன. சிறிது தூரம் தள்ளி நடந்து வந்த ஒரு புலி, மற்றொரு புலியை பாய்ந்து வந்து தாக்குகிறது. மற்றொரு புலியும் பதில் தாக்குதலில் இறங்க, அங்கு பெரும் போர் உண்டானது போல், இரண்டும் சண்டையிட்டன.

சண்டையின் முடிவில் மீண்டும் இரு புலிகளும் தனித்தனியே நடந்து செல்ல துவங்கிவிடுகின்றன. சபாரி ஜீப்களில் சுற்றுலா பயணிகள் இந்த சண்டையை அருகில் இருந்து பீதியுடன் கண்டிருக்கின்றனர்.

புலிகளின் இந்த ஆக்ரோஷ மோதல், பெரும் ஹிட் அடித்து, மைக்ரோ பிளாக்கிங்கில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் இந்த வீடியோவை 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 2.4 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர். 12.6 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது. என்ன இதயத்துடிப்பு எகிறுகிறதா உங்களுக்கும்…!

Views: - 6

0

0