யுஏஇ போலீஸ் வாகனத்தில் சவாரி செய்த 4 வயது சிறுவன்! எதற்கு தெரியுமா?

13 April 2021, 4:28 pm
Quick Share

நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்ற, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) காவல்துறையினர் அவனை தங்கள் போலீஸ் வாகத்தில் சவாரி அழைத்து சென்றனர். மேலும் சிறுவனுக்கு சிறிய எலக்ட்ரிக் கார் ஒன்றையும் பரிசாக வழங்க அது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, மேக் எ விஷ் பவுண்டேஷன் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வயது சிறுவன் முகமது, ஒரு எலக்ட்ரிக் கார் எனக்கு வேண்டும் என விருப்பத்தை தெரிவித்திருந்தான். மேலும் அப்போது போலீசார் அங்கு இருக்க வேண்டும் எனவும் அவன் கூறியிருந்தான். முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றிய அபுதாபி போலீசாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நோயால் உடல்நலம் குன்றிய, சிறுவன் முகமதுவுக்கு ‘மேக் எ விஷ் பவுண்டேஷன் யுஏஇ’ இணைந்து அபுதாபி காவல்துறையினர் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்தனர். மேலும் முகமது சவாரி செய்ய, ஒரு மின்சார வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க விரும்பினார். அவரது ஆசையும் அறக்கட்டளையால் நிறைவேற்றப்பட்டது. முகமதுவின் வீட்டு வாசலுக்கு போலீஸ் வாகனங்களில் சென்ற போலீசார், சிறுவனுக்கு போலீஸ் தொப்பி அணிவித்து, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். முடிவில், எலக்ட்ரிக் காரையும் அவனுக்கு பரிசாக வழங்கினர். முகமதுவும் காவல்துறை மீதான தனது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்தினார்,

https://www.instagram.com/p/CNhFXvJHTH5/?utm_source=ig_embed

இதன் வீடியோவை ‘மேக் எ விஷ் பவுண்டேஷன்’ அமைப்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுவனின் ஆசையை நிறைவேற்றி அந்த அமைப்புக்கும், அபுதாபி போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முகமதுவின் குடும்பத்தினரும் அபுதாபி போலீசாருக்கு தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Views: - 105

0

0