பர்கர் வாங்க 160 கி.மீ பயணித்த பெண்களுக்கு ரூ19 ஆயிரம் அபராதம்…

14 January 2021, 4:48 pm
Quick Share

இங்கிலாந்தின் தற்போது உருமாறிய கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 5ம் தேதி முதல் அந்நாட்டில் லாக்டவுண் அமல் படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவிலிருந்த லாக்டவுணை போல தற்போது அந்நாட்டில் லாக்டவுண் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரவிய கொரோனாவைவிட தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் இந்த லாக்டவுணை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு யார்க் ஷோர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஸ்கூட்டியிலேயே 160 கி.மீ பயணம் செய்து பர்கர் வாங்கிவந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் பர்கர் வாங்க விரும்பியதால் சுமார் 160 கி.மீ பயணம் செய்ததாகவும், மேலும் பர்கர் உணவுப் பொருள் என்பதால் அதை வாங்கி செல்ல இந்த லாக்டவுணில் அனுமதியிருப்பதாகவும் போலீசாரிடம் வாதாடியுள்ளனர்.

ஆனால் பர்கர் அத்தியாவசிய உணவுப் பொருள் பட்டியலில் இல்லாததால் போலீசார் அந்த பெண்களுக்கு 200 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது மக்கள் நீண்டநாள் லாக்டவுணால் சிரமப்படுவது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் தொடர்ந்து நாம் சிறப்பாக வாழ இந்த லாக்டவுணை தவிர வேறு வழியில்லை. பெரும்பாலான மக்கள் லாக்டவுணை மதித்து வீட்டிற்குள்ளேயே இருப்பதை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். அதே நேரத்தில் மக்கள் இது போலத் தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் ஆபத்திற்குள்ளாக்க வேண்டாம். எனத் தெரிவித்தார்.

Views: - 3

0

0