கணவனா? குடும்பமா? முடிவு எடுக்க முடியாமல் கோர்ட் மாடியிலிருந்து குதித்த பெண்…

14 January 2021, 5:08 pm
Quick Share

பீகார் மாநிலம் தந்தாரி பகுதியைச் சேர்ந்தவர் சங்கம் குமாரி இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பிரணவ் குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை வீட்டு ஓடிப்போய் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சங்கம் குமாரிக்கு இன்னும் 18 வயது ஆகாததால் அவர் மைனர் பெண் என்பதால் அவரை பிரணவ் குமார் கடத்திவிட்டதாக போலீசார் புகார் அளித்தனர். போலீசார் நீண்ட தேடுதலுக்குப் பிறகு பிரணவ் குமார் – சங்கம் குமாரி இருக்கும் இடத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு தேடிக் கண்டு பிடித்துக் கடந்த 12ம் தேடி அவர்களைப் பிடித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கோட்டிற்குச் சென்றுவிட்டதால் போலீசார் சங்கம் குமாரியை கோர்ட்டில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் சங்கம் குமாரியின் பெற்றோர் கோட்டிற்கு வந்து சங்கம் குமாரியைப் பேசி, பிரணவ் குமாரை விட்டு விட்டு தங்களுடன் வந்துவிடும்படி கூறியுள்ளனர். தற்போது தன் பெற்றோர் சொல்வதைக் கேட்பதா அல்லது தன் கணவனுடன் செல்வதா எனத் தெரியாமல் சங்கம் குமாரி குழம்பியுள்ளார்.

இந்த குழப்பதில் அவர் முடிவெடுக்க முடியாமல் கோர்ட் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இதனால் சங்கம் குமாரிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சங்கம் குமாரி கோர்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் பிரணவ் குமாருடன் செல்லும் போது அவருக்கு 18 வயது ஆகவில்லை என்றாலும், தற்போது அவர் 18 வயதை கடந்துவிட்டதால் அவர் விரும்பும் படியே கணவர் வீட்டிற்கோ அல்லது பெற்றோர் வீட்டிற்கோ செல்ல கோர்ட் அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0