‘எங்களுக்கும் வால் இருக்கும்ல’: கிளியின் புத்திக்கூர்மை…வைரலாகும் வீடியோ…!!

Author: Aarthi Sivakumar
15 March 2021, 6:26 pm
parrot tail - updatenews360
Quick Share

வால் இல்லாத கிளி ஒன்று காகிதத்தை கிளித்து அதனை வால் போன்று அழகாக சொருகிக்கொள்ளும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் கிளி ஒன்று தனது கூர்மையான அலகினால், ஒரு பேப்பரை சிறு சிறு துண்டாக நீளமான இறகு வடிவத்தில் கிழித்து, அதனை அழகாக உடலின் பின்புறம் வால் போன்று சொருகிக் கொள்கிறது.

வால் இல்லாத தனக்கு, பேப்பரை வாலாக மாற்றிய இந்த கிளியின் புத்திக்கூர்மை அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை இந்த கிளியின் செயல் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 63

0

0