இதென்ன செம்மறி ஆட்டுக்கு வந்த சோதனை: சேட்டையால் மாட்டிக்கொண்ட ஆடு…!!

19 April 2021, 12:21 pm
goat news - updatenews360
Quick Share

செம்மறி ஆடு ஒன்று குழியில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம்மறி ஆடு ஒன்று குழியில் சிக்கி கொண்டு வெளியே வர முயலும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இணையதளத்தில் பலரால் பகிரப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் குழி ஒன்றில் சிக்கி கொண்ட செம்மறி ஆடு வெளியே வரமுடியாமல் திணறுகிறது. அதன் பின்னங்கால்களை பிடித்து உரிமையாளர் அந்த ஆட்டை காப்பாற்றுகிறார். ஒரு வழியாக வெளியே வந்த ஆடு துள்ளிக்குதித்து ஓடுகிறேன் என்ற பெயரில் மீண்டும் குறுகலான அதே குழியில் சிக்கி கொள்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் என்னடா இது செம்மறி ஆட்டுக்கு வந்த சோதனை என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Views: - 27

0

0