‘எப்படியெல்லாம் யோசிக்குறாங்க’: திணுசா சைக்கிள் ஓட்டும் வாண்டுகள்…வைரலாகும் வீடியோ…!!

3 May 2021, 4:48 pm
cycle viral - updatenews360
Quick Share

சிறுவர்கள் எப்போதும் சேட்டை செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, நாம் சிறுவர்களாக இருந்த பொழுது செய்த சேட்டைகளை விட இப்போ இருக்கின்ற சிறுவர்கள் செய்யும் சேட்டை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.

சிறுவயதில் நாம் முதலில் ஓட்டிய வண்டி சைக்கிள் ஆகத்தான் இருக்கும். அப்படி பட்ட சைக்கிளை இந்த சிறுவர்கள் எப்படி ஓட்றாங்க என்பதை நீங்களே கொஞ்சம் பாருங்க. ஒரு சைக்கிள்ல ரெண்டு பேர் போலாம். சைக்கிள் ஒற்றவனுக்கு கால் வலிச்சா பின்னாடி கேரியர்-ல இருக்கிறவன் பெடல் மிதிப்பான் சைக்கிளு கொஞ்ச தூரம் அப்டியே ஓடிரும் .

ஆனா இந்த சின்ன பசங்க ஆளுக்கு ஒரு பெடல் மேல ஏறி நின்னு எப்படி சைக்கிளை ஓட்றானுங்க அதுவு சைக்கிளை எப்படி பேலன்ஸ் பண்ணி ஓட்றானுங்க பாக்கவே செம சிரிப்பா இருக்கு. இந்த வித்தையெல்லாம் எங்க கத்துக்குறானுங்களோ தெரியல . சேட்டை ரத்தத்திலையே ஊறிப்போன ஒருதனால தான் இப்படியெல்லாம் சாகசம் செய்ய முடியும்.

இந்த வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. சமூக வலைத்தளமான facebook-ல் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.பலர் இந்த வீடியோ ஷேர் செய்து வருகின்றனர்.

Views: - 76

0

0