ஊருக்குள் வந்து நாயை வேட்டையாடிய கருஞ்சிறுத்தை! வைரல் வீடியோ

Author: Udhayakumar Raman
9 March 2021, 9:41 pm
Quick Share

கருஞ்சிறுத்தை ஒன்று ஊருக்குள் வந்து தெரு நாயை தாக்கி கவ்விக்கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகாவில் உள்ள கபினி வனத்தில், கருஞ்சிறுத்தையின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்திய வன சேவை அதிகாரியான சுதா ராமன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தெரு நாயை கருஞ்சிறுத்தை ஒன்று தாக்கும் இந்த வீடியோவின் சிசிடிவி காட்சிகள் தற்போது ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு நிமிடம் 15 நொடிகள் ஓடும் இந்த வீடியோ கிளிப்பில், மலைப்பாங்கான பகுதி ஒன்றில், இருட்டில், மங்கிய வெளிச்சத்தின் நடுவே, கருஞ்சிறுத்தை ஒன்று வெளிப்படுகிறது. ஒரு பாதை வழியாக மெல்ல வரும் அந்த சிறுத்தை, வேகமாக சென்று நாய் ஒன்றை உணவுக்காக தாக்குகிறது. சில நொடிகளில் நாயை தனது வாயில் கவ்வியபடி, மீண்டும் இருட்டான பகுதிக்கு ஓடுகிறது. எலும்பை சில்லிட வைக்கும் இந்த வீடியோ, 26 ஆயிரத்துக்கும் அதிகமான பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வனங்களை அழித்து வன உயிரினங்களின் இருப்பிடங்களை குறைப்பதால், இதுபோன்ற தாக்குதல் நடைபெறுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாவம் அந்த நாய்.. அதன் ஆயுள் அவ்வளவு தான் என ஒருவர் கருத்து பதிவிட, மற்றொருவர், இயற்கையை குறை கூறும் மனிதர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என ஒருவர் தனது கருத்தை பதிவு செய்தார்.

Views: - 69

0

0