சுயசார்பு நபர் : 98 வயதிலும் தளராமல் உழைத்து இளைய தலைமுறையினரின் ரோல் மாடலாக விளங்கும் தாத்தா

6 March 2021, 11:05 am
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலியில், 98 வயதிலும் தளராது உழைக்கும் தாத்தா, வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதற்கு ஆதாரமாக திகழ்கிறார்.

உ.பி. மாநிலம் ரே பரேலியை சேர்ந்த 98 வயதான விஜய் பால் சிங்.  இவர் இப்பகுதியில், பட்டாணி மசாலா விற்பனை செய்து வருகிறார். இவர் விற்பனை செய்துவரும் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி வைபவ் ஸ்ரீவத்சவா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர், விஜய் பால் சிங்கிடம் உரையாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது.

அந்த வீடியோவில், வீட்டில் சும்மா இருந்தாலே, மனச்சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். என் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனது செலவுக்கு தேவையான பணத்தை நானே சம்பாதித்துக் கொள்கிறேன் என்று பேசியவாறே பட்டாணி மசாலை தயார் செய்கிறார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, முதல்வரின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, விஜய் பால் சிங்கை, மாவட்ட நீதிபதி நேரில் சந்தித்தார். விஜய் பால் சிங்கிற்கு தேவையான ரேசன் கார்டு, நிதியுதவி , சான்றிதழ்களை வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்தார். விஜய் பால் சிங், யார் தயவும் இல்லாமல், தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக்கொண்டு, உண்மையான சுயசார்பு நபராக விளங்குவதாக, மாவட்ட நீதிபதி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0