நெட்டிசன்களின் கைகளில் சிக்கிய விராட், ரோஹித்! வைரலாகும் மீம்ஸ்கள்

8 February 2021, 3:05 pm
Memes - Updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவின் புகைப்படம் ஒன்று, நெட்டிசன்களின் மீம் கண்டென்ட் ஆக மாறி உள்ளது. அந்த மீம்ஸ்கள் அனைத்தும் வைரலாக மாறி உள்ளது.

என்னடா டெம்ப்ளட் கிடைக்கிறது என காத்திருக்கும் நெட்டிசன்களுக்கு தொக்காக மாட்டி உள்ளனர் ரோஹித் சர்மாவும், விராத் கோஹ்லியும்.. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியில் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தனது 100வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதம் விளாசினார்.

முதல் இரண்டு நாட்களும் பந்துவீசியே இந்திய வீரர்கள் களைத்து போயினர். இந்நிலையில், வெறுப்பாக பீல்டிங் செட் செய்த இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், ரோஹித்தும் தான் மீம் கன்டென்ட்டாக நெட்டிசன்களுக்கு சிக்கியுள்ளனர். அதை வைத்து பலரும் மீம்ஸ்களை தயாரித்து வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது. அனைத்து மீம்ஸ்களும் ரசிக்கும்படி உள்ளதால், நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

வகுப்பிற்கு புதிய மாணவி வரும் போது மாணவர்கள் எப்படி பார்ப்பார்கள்.. பிள்ளைகள் மொபைலை பார்க்கும் போது பெற்றோர் ரியாக்ஷன், நண்பன் அவனது காதலியுடன் ஊர் சுற்றும் போது சிங்கிள் நண்பனின் ரியாக்ஷன், மும்பை லோக்கல் ரயிலில் இருவரும் பயணிப்பது என விதவிதமான மீம்ஸ்கள் நெட்களில் வலம் வருகின்றன.

சில மீம்ஸ்கள்…

Views: - 0

0

0