பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தான் ஜெயிலில் வாடிய இந்திய பெண்? எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
27 January 2021, 1:39 pmஹசீனா பேகம் என்ற இந்திய பெண், தனது பாஸ்போர்டை பாகிஸ்தானில் வைத்து தொலைத்து விட்ட காரணத்தால், 18 ஆண்டுகள் அந்நாட்டு சிறையில் அடைபட்டுள்ளார். தவறேதும் செய்யாமல், ஜெயிலில் வாடி வதங்கிய அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் வசிக்கு தில்ஷாத் அகமதுவின் மனைவி ஹசீனா. தற்போது 65 வயதான அந்த பெண், தன் கணவரின் உறவினர்களை சந்திப்பதற்காக, 18 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கு அப்போது தெரியாது, தான் ஜெயிலில் அடைக்கப்படுவோம் என்றோ அல்லது வீடு திரும்ப 18 ஆண்டுகள் ஆகும் என்றோ..
ஆம்.. பாகிஸ்தானின் லாகூரில் வைத்து அந்த பெண் தனது பாஸ்போர்ட்டை தொலைத்திருக்கிறார். இதனையடுத்து பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஹசீனா. ஆனால் கைது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. உறவினர்கள் ஹசீனாவை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளிக்க, காணாமல் போனவர்கள் பட்டியலில் மட்டும் ஹசீனா சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும், லோக்கல் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுகிடந்த ஹசீனாவுக்கு, பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டு, இந்திய அதிகாரிம் வசம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து சஹரன்பூர் திரும்பிய அவருக்கு, உறவினர்களும், காவல்துறை அதிகாரிகளும் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதுகுறித்து ஹசீனா கூறுகையில், ‘பாஸ்போர்ட்டை இழந்தபோது நான் லாகூரில் இருந்ததேன். அங்குள்ள அதிகாரிகள் என்னை ‘பலவந்தமாக’ பாகிஸ்தானில் உள்ள சிறையில் அடைத்துவிட்டனர். நான் நிரபராதி.. என்னை விடுவியுங்கள் என பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தினேன். இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்த அவுரங்காபாத் போலீசாருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்’ என்றார்.
0
0