மரணமும் சொர்க்கத்தில் நிச்சயமாகும்! நிரூபித்த காதல் ஜோடிகள்

23 January 2021, 3:43 pm
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடிகள் தங்கள் 70வது திருமண நாளை கொண்டாடிய நிலையில், ஒரே நேரத்தில், கைகளை பற்றியபடி, கொரோனா அரக்கனுக்கு பலியான நிகழ்வு, நெட்டிசன்களின் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேரந்த டிக் (வயது 90) மற்றும் ஷெர்லி மீக் (வயது 87). காதல் ஜோடிகளான இவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி தங்கள் 70வது திருமண நாளை விமரிசையாக கொண்டாடி உள்ளனர். இவர்களின் அன்பின் பிரதிபலிப்பாக, 5 குழந்தைகளும், 13 பேர குழந்தைகள் மற்றும் 28 கொள்ளு பேர பிள்ளைகளும் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்வில், கொரோனா தொற்ற, இருவரும் ஒன்றாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், வயது மூப்பின் காரணமாக அவர்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்திருக்கிறது. இதனை அவர்களது குடும்பத்தாரிடம் தெரிவித்த டாக்டர்கள், விரைவில் அவர்கள் மரணித்துவிடுவார்கள் எனவும் கூறிவிட்டனர். இதனையடுத்து மகன் வேண்டுகோளுக்கு இணங்க, இருவரையும் ஒரே வார்ட்டில், அருகருகே தங்க வைத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

டிக் அருகே ஷெர்லியின் பெட்டை கொண்டு வந்தபோது, இருவரும் தங்களது கரங்களை இறுக பற்றிக் கொண்டனர். ‘பரவாயில்லை.. நாம் போகலாம்’ என மனைவி கணவரிடம் கூறி இருக்கிறார். ‘நான் உணக்காக காத்திருப்பேன்’ என பதிலுக்கு அவர் கூற, சிறிது நேரத்திலேயே, கைகளை இறுக பற்றியபடி, மனைவி உயிரிழந்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் கணவரும் காலமானார்.

இவர்களது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மரணமும் அவர்களை ஒன்றாக சொர்க்கத்துக்கே அழைத்து சென்றுவிட்டது என அந்த நிகழ்வை அருகிலிருந்து கண்ட நர்ஸ் கண்கலங்கி உள்ளார். எத்தனை பேருக்கு இந்த மாதிரி பாக்கியம் அமையும்.. கூறுங்கள்…

Views: - 4

0

0