பசிபிக் கடலில் இப்படியொரு தீவா – கூகுள் எர்த்தில் கண்ட பெண் அதிர்ச்சி

23 February 2021, 11:34 am
Quick Share

பசிபிக் கடலின் டிரினிட்டி தீவு அருகே, மனிதனின் ஆண்குறி வடிவில் ஒரு தீவு இருப்பது கூகுள் எர்த் மூலம் தெரியவந்துள்ளது.


கூகுள் மேப்உதவியுடன், நாம் யாருடைய உதவியும் இன்றி, எந்தவொரு இடத்தையும் தனியாக சுற்றி வருகிறோம். இது அவரவர்கள் சார்ந்த நாட்டில் என்றால் பிரச்சினையில்லை. ஆனால், உலகம் முழுவதும் சுற்றி வர கூகுள் எர்த் செயலி நமக்கு பேருதவி புரிகிறது. அப்படி ஒரு பெண், உலக வரைபடத்தை ஆராய்ந்த போது இந்த விசித்திர தீவு கண்ணில்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம், டெட்ராய்ட் பகுதியை சேர்ந்த ஜோலின் வல்டாஜியோ, என்ற பெண்மணி, கூகுள் எர்தி செயலியின் மூலம், உலக வரைபடத்தை மேய்ந்து கொண்டு இருந்தார்.

அப்போது பசிபிக் கடலின் டிரினிட்டி தீவுக்கு அருகே, ஆண்குறி வடிவில் வித்தியாசமான நிலப்பகுதி இருந்ததை அவர் கண்டறிந்தார். இந்த தீவு அல்லது நிலப்பகுதியில், மனிதர்கள் வாழ்கின்றனரா என்ற தகவல் இல்லை. இந்த விசித்திர தீவு, டிரினிட்டி தீவின் ஓவுயா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த ஓவுயா பகுதியில்ல சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  ஜோலின், தான் கண்டறிந்த அந்த ஆண்குறி வடிவ தீவு குறித்த செய்தியை, அதன் லோகேசனுடன் சேர்த்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த தீவின் வடிவம் தனக்கு மிகவும் வினோதமாக இருந்ததாக தோன்றவே, அதை நன்றாக ஜூம் செய்து பார்த்தேன். அது விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்குறியை போன்று இருந்ததாக, ஜோலின்,அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 8

0

0