வாழ வழியில்லாமல் கணவனை விபச்சாரத்திற்கு அனுப்பிய மனைவி…

21 January 2021, 3:27 pm
Quick Share

கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்ததால், தன் கணவனையும் விபச்சாரத்தில் ஈடுபடச் சம்மதித்த மனைவியின் கொடூர முடிவு, கொரோனாவின் குரூர முகத்தை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கொரோனா தொற்று, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நாடுகளில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். கிடைத்த வேலையைச் செய்யும் அளவிற்கு மக்களின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டெய்லி ஸ்டார் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிக்கி மற்றும் மார்க் ( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொரோனா தொற்று இவர்களின் வாழ்க்கையை அப்படியே முடக்கிவிட்டது. வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாததால், நிக்கி, திருமணத்திற்கு முன்பு தாம் செய்துவந்த பாலியல் தொழிலை மீண்டும் செய்வதெனத் திட்டமிட்டு தனது முடிவைக் கணவரிடம் தெரிவித்துள்ளார். செய்வதறியாது திகைத்த மார்க், வேறு வழியில்லாததால், அதற்குச் சம்மதித்தார். அதற்கான இணையதளத்தில் மீண்டும் தனது விபரங்களை, நிக்கி சேர்த்தார்.

அப்போது, மார்க்கும் நாம் இருவரும் சேர்ந்து செய்தால் மட்டுமே, குடும்பத்தின் நிதிச்சுமையை மாற்ற முடியும் என்பதால்,தானும் இந்த தொழிலில் ஈடுபட விரும்புவதாக நிக்கியிடம் தெரிவித்தார்.
இதற்கு முதலில் மறுத்த நிக்கி, பின் குடும்பத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு மார்க்கின் இந்த முடிவுக்குச் சம்மதம் தெரிவித்தார். பாலியல் தொழிலில் ஆண் விபச்சாரிகள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மாரக்கிற்கு நிக்கி விளக்கிக் கூறினார்.


பின் இருவருக்குள்ளும் சமரசம் செய்துகொண்டு, எப்போதும் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டும் என்பதனடிப்படையில், நிக்கி, மார்க் இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த தொழில் குறித்து தமது குழந்தைகளிடம் தெரிவிக்காத அவர்கள், உறவினர்களும் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக, அவர்களிடம் இந்த விசயத்தை அவர்கள் மறைத்துள்ளனர்.

Views: - 7

0

0