தன் தற்கொலைக்கு கணவரின் குடும்பத்தினரே காரணம் – 18 பக்க கடிதத்தால் பரபரப்பு

23 February 2021, 12:56 pm
Quick Share

கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர், தனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்ததாலேயே, தான் தற்கொலை செய்து கொண்டதாக, பெண் எழுதி வைத்துள்ள கடிதத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஹிதேந்திர படேல். இவர் சோழா பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையின் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஹர்ஷா படேலுக்கும், கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9ம் தேதி, கணவர் பணிபுரியும் மருத்துவமனை சென்ற ஹர்ஷா, வீட்டிற்கு திரும்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கு இருந்தவர்கள், சோழா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹர்ஷாவை அனுமதித்தனர்.

ஹர்ஷாவை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஹர்ஷா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து, சோழா பகுதி போலீசார் நடத்திய விசாரணையில், ஹர்ஷா எழுதிய 18 பக்க கடிதத்தை மீட்டனர். அந்த கடிதத்தில், ஹர்ஷா குறிப்பிட்டு உள்ளதாவது, ஹிதேந்திர படேல், உடல் இச்சைக்காகவே, என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹிதேந்திராவின் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஒருநாள், என் மாமியார், என்னை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொல்ல முயன்றாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஹர்ஷாவின் தந்தை நஞ்ஜிபாய், போலீசில் அளித்த புகாரில், ஐபிசி மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ்,ஹிதேந்திரா குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஹிதேந்திரா மீது, இயற்கைக்கு மாறான உடலுறவு (377வது சட்டப்பிரிவு) தற்கொலைக்குதூண்டுதல் (328வது சட்டப்பிரிவு) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஹிதேந்திரா குடும்பத்தினரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 0

0

0