“மணப்பெண் தோழியாக வேண்டுமா? இந்த “37 கட்டுப்பாடு” ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்… ” கண்டிஷன் போட்ட மணப்பெண்…

Author: Udayaraman
2 January 2021, 9:10 pm
Quick Share

திருமணங்கள் என்றால் மணப்பெண், மணமகனை விட மாப்பிள்ளை தோழன், பெண் தோழிக்குத் தான் செம மவுசு. இது இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இந்த மாப்பிள்ளை தோழன், மணப்பெண் தோழி நடைமுறைகள் உள்ளன. பெரும்பாலான ஊர்களில் இந்தியாவைப் போல மணமக்களைப் போல அவர்களின் தோழர்களாக வருபவர்களும் ஆடை முதல் மேக்கப் வரை அசத்துவார்கள்.

நிலைமை இப்படி இருக்கையில் சமீபத்தில் மணமகள் ஒருவர் தன்னுடன் மணப்பெண் தோழியாக வருபவர்களுக்கு 37 வித்தியாசமான கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு அவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். இது குறித்து அந்த மணப்பெண்ணே தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டிருந்தார் அதில் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்து இந்த ஒப்பந்தத்தில் தனது தோழிகள் கையெழுத்துப் போட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தில் உள்ள கண்டிஷன்களை கீழே ஒவ்வொன்றாகக் கொடுத்துள்ளோம் பாருங்கள்

ஒப்பந்தத்தில் உள்ள கண்டிஷன்கள்

 1. திருமணத்தில் மாற்றம் செய்ய மணப்பெண்ணிடம் தோழிகள் எதையும் முயலக் கூடாது.
 2. திருமணத்தில் யாரைப் பற்றியும் நெகட்டிவாக பேசக் கூடாது.
 3. தற்போது இருக்கும் உடல் எடையை விட 3 கிலோவிற்கு மேல் அதிகமாகக் கூடாது.
 4. திருமணத்தின் போது கருப்பு அல்லது அடற் பிரவுன் நிறத்தில் தான் முடிவை வைத்திருக்க வேண்டும் வேறு சாயம் பூசக் கூடாது.
 5. திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு லேசஸ் அணிவிக்க முயற்சிக்க கூடாது.
 6. திருமண நிகழ்ச்சிகளான பிரைடல் ஷவர், பேச்சுலர் பார்ட்டி, ரிகர்சல், திருமணம் ஆகிய நிகழ்வுகளில் கட்டாயம் தோழிகள் கூட இருக்க வேண்டும் (நெருங்கிய நபர்களின் இறப்பு, ஜெயில், 5 மாதத்திற்கு அதிகமான கர்ப்பம், உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவர் பரிந்துரை இருந்தால் மட்டும் விதி விலக்கு )
 7. திருமணம் வரை மணப்பெண்ணின் தோல், முடி, நகம் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும்.
 8. மணப்பெண் தோழிகளில் யார் மணப்பெண்ணிற்கு மேக்அப் போட வேண்டும் என்பதைத் திருமண நேரத்தில் மணப்பெண் தான் முடிவு செய்வார்
 9. மணப்பெண் தேர்வு செய்யும் உடையைத்தான் மணப்பெண்ணின் தோழிகள் அணிய வேண்டும்.
 10. மணப்பெண் தேர்வு செய்வதைத் தவிர வேறு ஆடைகள், ஆபரணங்கள், ஏன் விரலில் வேறு மோதிரம் கூட அணியக் கூடாது.
 11. திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று வேண்டுமென்றே கர்ப்பம் தரித்தது தெரிந்தால் திருமண நிகழ்வில் உள்ள விதி விலக்கில் அந்த கர்ப்பம் சேராது.
 12. திருமணத்திற்கு மணப்பெண் தெரிவிக்கும் அனைத்திற்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
 13. திருமண நிகழ்வில் பேச்சுலர் பார்ட்டியை தவிர மற்ற எந்த நி நிகழ்விலும் 7 ரவுண்டிற்கு மேல் சரக்கு அடிக்கக் கூடாது.
 14. மணப்பெண்ணின் அனுமதியில்லாமல் தோழிகள் தங்களின் ஆண் நண்பரைத் திருமணத்திற்கு அழைத்து வரக்கூடாது.
 15. திருமண நிகழ்விற்குத் தோழிகள் தங்கள் உறவினர்களை அழைத்து வர அனுமதியில்லை.
 16. திருமணத்திற்கு சம்பந்தம் இல்லாத குழந்தைகளைத் தோழிகள் உடன் அழைத்து வரக்கூடாது.
 17. தோழிகளுக்குக் குழந்தை இருந்தால் முன்னதாக அந்த குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆட்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளைக் கவனிப்பதை ஒரு காரணமாகச் சொல்லி திருமணத்திற்கு வராமல் இருக்கக்கூடாது.
 18. திருமணத்திற்கு வரும் ஆண்களிடம் எந்த வித ஆட்வான்டேஜ்களையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 19. திருமணத்திற்கு வரும் எந்த ஆண்களையும் திருமண நிகழ்வின் போது டேட்டிங் செய்யக் கூடாது.
 20. திருமண நிகழ்வின் போது சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும்.
 21. மணப்பெண்ணிடம் கோபமோ எரிச்சலோ அடையக் கூடாது. மணப்பெண் பாஸ் போன்ற குணம் கொண்டவர் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
 22. மணப்பெண்ணை மீறி நடந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாது
 23. மணப்பெண் தேர்வு செய்யும் சிகை அலங்காரத்தைத் தான் தோழிகள் திருமண நிகழ்வின் போது செய்து கொள்ள வேண்டும்.
 24. திருமணத்திற்கான ஆடைகள், செருப்புகள், உள்ளிட்டவற்றைத் தோழிகள் அவர்களது செலவிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும்.
 25. பேச்சுலர் பார்ட்டியில் ஏதாவது பிரபலமான இடத்தில் நடக்கும் அங்கும் தோழிகள் வர வேண்டும்.
 26. அந்த பிரபலமான இடத்திற்கு வந்து போகும் செலவுகளையும் தோழிகளே ஏற்க வேண்டும் அன்று அணியும் ஆடைகளையும் தோழிகள் தான் வாங்க வேண்டும்.

27 தோழிகளுக்குத் திருமண நிகழ்வுகளில் கிடைக்கும் பரிசுகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணம் மற்றும் ரிசப்ஷன் பரிசுகள் மணப்பெண்ணிற்கே சொந்தம்

 1. மணப்பெண்ணிற்கு எந்த பொருட்கள் வாங்கவும் பரிந்துரைகள் தேவையில்லை ஒருவேலை மணப்பெண்ணிற்குப் பரிந்துரைக்க விரும்பினால் அதே பொருள் குறைந்த விலையில் கிடைத்தால் மட்டும் பரிந்துரை செய்யலாம்.
 2. தோழிகள் திருமண நிகழ்வை எந்த விதமான காரணம் சொல்லியும் தட்டிக்கழிக்கக் கூடாது. தட்டிக் கழிப்பதாக இருந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல் தவிர்க்கலாம். அதனால் மணப்பெண்ணுடனான நட்பு கெடாது. அதே நேரத்தில் கையெழுத்துப் போட்ட பின்பு வராமல் இருந்தால் கட்டாயம் நட்பு கெட்டுவிடும்.
 3. திருமண விருந்தில் அத்தனை பேரும் சமமாகவே நடத்தப்படுவார்கள்.
 4. திருமண ரிசப்ஷனில் சில பிசிக்கல் வேலைகளைத் தோழிகள் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக தோழிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
 5. தோழிகள் கண்களுக்கு கலர் காண்டேக்ட் லென்ஸ்கள் அணியக் கூடாது.
 6. கண்களில் கண்மையும், புருவத்தில் கருப்பு நிறமும் பயன்படுத்தக் கூடாது.
 7. பளபளப்பான லிப்ஸ்டிக்களை பயன்படுத்தக் கூடாது.
 8. விரல்களில் நெயில் பாலீஷ் போடக் கூடாது.
 9. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 5வது நாளில், அடுத்த வாரங்களில் ஒவ்வொரு நாளும் யார் யார் என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல் வழங்கப்படும் அதன் படி அவர்கள் நடக்க வேண்டும்.
 10. ஒவ்வொருவரும் மாதம் 50 டாலர் பணம் சேமிக்க வேண்டும் அடுத்த 14 மாதம் கழித்துத் தான் திருமணம் என்பதால் அவர்கள் அந்த பணத்தை வைத்து திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த கண்டிஷன்களை படிக்கும் போது உங்களுக்கே தலை சுற்றுகிறது அல்லவா இந்த கண்டிஷன்கள் அடங்கிய ஒப்பந்தத்தை மணப்பெண் தன் 10 தோழிகளுக்குக் கொடுத்துள்ளார். அதில் 6 பேர் மட்டுமே ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். என்னதான் தோழிகள் என்றாலும் இதை ஒப்பந்தம் போட்டுக் கேட்டு கொஞ்சம் ஒவர் தான் என உங்களுக்குத் தோன்றுகிறதா? கமெண்டில் சொல்லுங்கள்.

Views: - 47

0

0