இப்படியும் நாங்க பழிவாங்குவோம்! இவங்க பண்ண காரியத்த பாருங்க!

4 February 2021, 6:21 pm
Quick Share

தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலன், பேஸ்புக்கில் பழகி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அவரை பழிவாங்கும் விதத்தில், காதலனின் மனைவியின் முன்னாள் காதலனை அந்த பெண் திருமணம் செய்து கொண்டாராம்.. படிக்கும் போது தலை சுற்றுகிறதா.. வாங்க விரிவாக பார்ப்போம்..

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த அயிர்ஷயர் என்ற பகுதியை சேர்ந்த ஜேட் புர்விஸ் என்ற பெண் டிக் டாக் செயலியில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பேசியிருக்கும் அவர் கூறியது தான் அதிர்ச்சி ரகம். காதலில் அடைந்த தோல்விக்காக தனது காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கியதாக அவர் கூறியிருக்கிறார்.

ஜேட் ஒருவரை மூன்று ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்தாராம். அவருடன் திருமணத்திற்காக நிச்சயமும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரது வருங்கால கணவருக்கு, பேஸ்புக்கில் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, ஜேட்டை விட்டுவிட்ட, அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதனால் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார் ஜேட்.

அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றி விட்டது. எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தவருக்கு, தனது காதலனின் மனைவி, 5 ஆண்டுகள் வேறு ஒருவருடன் காதலில் இருந்திருக்கிறார் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அந்த நபரை சந்தித்து பேசியிருக்கிறார் ஜேட். அவரும் காதல் தோல்வியில் மருக, இருவரும் சேர்ந்து தங்களை காதல் எனும் பெயரில் ஏமாற்றியவர்களை பழிவாங்க முடிவு செய்துள்ளனர்.

எப்படி பழி வாங்கினார்கள் தெரியுமா? ஏமாறிய இருவரும், திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து அவர்களை பழிவாங்கி உள்ளனர். திருமணம் செய்து 4 ஆண்டுகளாக இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தாங்கள் வென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த டிக் டாக் பதிவு, வைரலாக பரவி வருகிறது. இது தான் உண்மையான பழிக்குப் பழி என பலரும் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0