வச்ச குறி தப்பாது! காலால் அம்பு எய்து உலக சாதனை படைத்த சிங்கப் பெண்!

29 March 2021, 1:19 pm
Woman Shoot Arrow Feet - Updatenews360
Quick Share

பிரிட்டானி வால்ஷ் என்ற பெண், தனது கால்களை பயன்படுத்தி, வில்லில் இருந்து அம்பை 12.31 மீட்டர் தூரத்திற்கு எய்தி உலக சாதனை படைத்திருக்கிறார். அவர் 11 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக இருந்தவராம்.. வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே..!!

கின்னஸ் உலக சாதனை படைத்தவர்களின் விவரங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. பிரிட்டானி வால்ஷ் என்ற அந்த பெண் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான உலக சாதனையுடன் இன்டர்நெட்டை ஆச்சரியப்படுத்தினார். தனது கால்களைப் பயன்படுத்தி மிக அதிகமான அம்பு ஷாட் செய்த சாதனையை அவர் படைத்துள்ளார். தனது அக்ரோபாட்டிக்ஸ் திறனைப் பயன்படுத்தி, கையை ஒரு கம்பியன் மீது ஊன்றி, தனது கால்களால் சிரமமின்றி வில்லில் இருந்து அம்பை எய்திருக்கிறார்.

வால்ஷ் குறித்து கின்னஸ் அமைப்பு பதிவிடுகையில், ‘11 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக இருந்த பிரிட்டானி வால்ஷ், 12.31 மீட்டர் தூரம் கால்களால் அம்பு எய்து சாதனை படைத்தார்’ என பதிவிட்டிருக்கிறது. வால்ஷ் சர்க்கஸ் மற்றும் நாடகங்களில் நடிகையாக கடந்த 11 ஆண்டுகளாக வலம் வந்தவர். அவரிடம் அக்ரோபாட்டிக் திறன்கள் இருந்திருக்கிறது. மேலும் தனது கைகளை பயன்படுத்தி எவ்வாறு சமநிலையாக இருப்பது என்பதும் அவருக்கு தெரியும். அதற்கு நிறைய திறமையும், பலமும் தேவை.

இந்நிலையில், ‘டேவிட் லெட்டர்மேன் எழுதிய தி லேட் ஷோ’வில், தனது அக்ரோபாட்டிக் வில்வித்தை காட்டினார். அவரது இந்த செயல் வைரலாக பரவியது. அவரது திறமையை பார்த்த மக்கள் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0