ஆண்குறி வடிவில் காணப்பட்ட அதிசய மீன்! வைரல் புகைப்படங்கள்

28 February 2021, 8:02 pm
New Fish - Updatenews360
Quick Share

கடலில் தென்பட்ட அரியவகை ஆண்குறி வடிவிலான மீன்னின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கமெண்ட்களை காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

கடல் விலங்குகளின் உலகம் கண்கவர் உலகம். அதனை முழுமையாக இன்று வரை ஆராய முடியவில்லை. ஆழ்கடலில், யாரும் அறிந்திராத, பார்த்திராத ஏராளமான உயிரினங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை கேமரா கண்களுக்கு சிக்குவதும் அபூர்வம் தான். அப்படி ஒரு உயிரினம் கேமராவில் சிக்க, அதன் புகைப்படங்கள், பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய கடற்கரையில், ஆண்குறி வடிவிலான மீன் ஒன்று தென்பட்டிருக்கிறது.

அதனை பார்க்கும் போது அப்படியே ஆணின் பிறப்புறுப்பு போல இருப்பது விசித்திரமாக இருக்கிறது. இதன் புகைப்படத்தை ஜோசி ஜோன்ஸ் என்பவர் எடுத்திருக்கிறார். விக்டோரியாவில் உள்ள ரை பிரண்ட் பீச்சை சுற்றியுள்ள கடலை ஆராய்ந்து கொண்டிருந்த போது, அந்த வினோத மீனை கண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அது மீன் இல்லை. கடல் புழு!!

ஃபைலம் பிரியாபுலிடா வகுப்பை சேர்ந்த இது பாரப்பதற்கு ஆண் குறி போலவே இருக்கிறது. இதன் புகைப்படங்களை ஜோன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அது வைரலாகும் என அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். நெட்டிசன்களை அது வியப்பில் ஆழ்த்த லைக்ஸ், கமெண்ட்ஸ் என குவிந்த அவரது பதிவு வைரலானது. பேஸ்புக்கிலும் சிலர் இதனை பகிர்ந்தனர். பலரும் தங்கள் கமெண்ட்ஸ்களை காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஜோன்ஸ் கூறுகையில், ‘‘நான் இந்த கடற்கரையை 10 ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறேன், அப்படி தண்ணீருக்குள் சுத்தம் செய்த போது இந்த வித்தியாச ஆண்குறி மீனை கண்டேன்’’ என கூறியிருக்கிறார்.

Views: - 8

1

0