இந்த பச்சோந்தி என்ன இவ்ளோ குட்டியா இருக்கு? சாதனைக்கே பிறந்திருக்கு!!

6 February 2021, 5:30 pm
Quick Share

ஒரு விதையின் அளவு மட்டுமே உள்ள சிறிய பச்சோந்தி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பச்சோந்தி தான், உலகில் உள்ள ஊர்வன இனத்தில் மிக சிறியதாம்.

ஜெர்மன், மடகாஸ்கர் விஞ்ஞானிகள் இணைந்து, ஆப்ரிக்காவில் உள்ள, மடகாஸ்கர் தீவில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அளவில் மிகச்சிறிய பச்சோந்திகள் இரண்டை கண்டுபிடித்துள்ளனர். ஆண், பெண் பச்சோந்தி இரண்டுமே ஒரு விதையின் அளவு மட்டுமே இருந்துள்ளது. ‘நானோ’ பச்சோந்தி என அழைக்கப்படும் இந்த பச்சோந்திகளில், ஆண் பச்சோந்தி 22 மில்லி மீட்டர் நீளமும், பெண் பச்சோந்தி 29 மில்லி மீட்டம் நீளமும் இருந்துள்ளன. ஆண் பச்சோந்தியின் உடல் மட்டும் 13.5 மில்லி மீட்டர் (0.53 இன்ச்) இருந்துள்ளது.

ஊர்வன இனத்தை சேர்ந்த 11,500 உயிரினங்களில், 13.5 மில்லி மீட்டம் நீளம் கொண்ட இந்த ‘நானோ’ ஆண் பச்சோந்தி தான், ஊர்வன இனத்தில் உலகின் மிகச்சிறியது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதற்கு ‘புரோக்கேஸி நானா’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த பச்சோந்திகள்ல மழைக்காடுகளின் தரையில் இருக்கும் மைட்ஸ் என்ற சிறிய பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். புற்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்கின்றன. பச்சோந்திகள் அரிய வகை உயிரினங்களாக மாறி வருகின்றன. அதன் வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு காணப்படும் உயிரினங்களில், இது மட்டும் ஏன் அளவில் சிறியதாக இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்’ என்றனர்.

Views: - 0

0

0