ஹெட்செட்டை கட் செய்யும் யூடியூபர்! காண்டாக்கிவிட்டு அவர் தரும் பரிசை பாருங்க!

23 February 2021, 12:24 pm
Quick Share

யூடியூப் பிரபலமான ஜுவான் கோன்சலஸ், தனது பழைய வீடியோ ஒன்றை உயிர்ப்பித்து அதனை மீண்டும் வைரலாக்கி இருக்கிறார். அதில், காதில் ஹெட்செட்டுடன் பாட்டு கேட்டு கொண்டிருப்பவர்களின் வயரை துண்டித்து அவரை கோபப்படுத்தி, பின் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் இயர்பட்ஸை பரிசாக வழங்கி அவர்களை திக்கு முக்காட வைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீங்கள் ஏர்பட்ஸ் உலகிற்கு புதியவராக இருந்தால், ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் ஏர்பட்ஸ் வாங்க தான் உங்கள் மனம் ஏங்கும். இந்த விலை உயர்ந்த ஏர்பட்ஸை வாங்க முடியாதவர்கள், ஆன்லைன் தளங்களில் பார்த்து ஏக்கம் கொள்வது நடக்கும். நீங்கள் தெருவில் நடக்கும் போது, உங்கள் ஹெட்செட்டை ஒருவர் பறிந்து கொண்டு ஓடினால், நீங்கள் எப்படி உணர்வீர்கள். அதுவே ஒருவர் உங்கள் ஹெட்செட் வயரை கட் செய்தால் என்ன செய்வீர்கள்?

பிரபல யூடியூப் சேனலான ‘தட்வாஸ் எபிக்’கின் ஜூவான் கோன்சலஸ், தனது பழைய வீடியோ ஒன்றை தற்போது மீண்டும் வைரலாக்கி இருக்கிறார். அந்த வீடியோவில் ஜூவான், ஹெட்செட் மாட்டியிருப்பவர்களின் பின்னால் பதுங்கி, தன்னிடமிருக்கும் கத்தரிக்கோல் கொண்டு அதன் வயரை துண்டித்து விடுகிறார். வயர்லெஸ் ஏர்பட்ஸ் போட்டிருந்தால் அதனை தூக்கி கொண்டு ஓடி விடுகிறார். கோபத்தின் உச்சிக்கு செல்லும் அவர்கள் இவர் மீது அடிக்க பாய, அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் இயர்பட்ஸ்களை பரிசாக வழங்கி திக்குமுக்காட வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 0

0

0