தனியாக வசித்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணம் திருட்டு.. கொள்ளையில் ஈடுபட்ட பெண் கைது : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 12:48 pm
Tirupur Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் பெண்ணுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் (வயது 85). கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் இருந்த அவரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் 6,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் செல்லம் நகரை சேர்ந்த புஷ்பம் (வயது 50) என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, குற்றம்சாட்டப்பட்ட புஷ்பம் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்

Views: - 989

0

0