அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் கிடையாது: அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்…!!

Author: Aarthi
16 October 2020, 1:29 pm
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருவரும் குணமடைந்தனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் 2வது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் நோய் தடுப்பு பணிகளை நன்றாகவே மேற்கொண்டு வருவதாகவும், மீண்டும் ஒரு பொதுமுடக்கம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 34

0

0