அமெரிக்க வானில் : அதிசய வண்ண பிரமிட் தோற்றம்

8 November 2019, 6:46 pm
SKY-UPDATENEWS360
Quick Share

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தின் முக்கிய நகரமான பிலடெல்பியாவில், நேற்று இரவில், ஆரஞ்சு நிற ஒளி பொருந்திய பிரமிடு போன்ற ஒரு உருவம் அமெரிக்க வானில் தோன்றி இருக்கின்றது.

அமெரிக்க வானில், பிரமிட் போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்காவின் பிலடெல்பியா நகர மக்கள், அந்த பிரமிட் போன்ற வானில் தோன்றிய வடிவத்தை, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலமாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பிரமிட் போன்ற வடிவத்தை பற்றி, பலரும் தங்களதின் சொந்த கருத்துக்களையும், பல்வேறு வகையான தகவல்களையும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரமிட் போன்ற வண்ண வடிவம் அமெரிக்க வானில் தோன்றியதை பற்றி, யுடியூப் ஆராச்சியாளர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, பிரமிட் வடிவ வான் நிகழவு என்பது, ஆச்சர்யமான ஒரு நிகழ்வு தான் என்றும், வெனிசியா என்கின்ற பெண்ணால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமானது, அமெரிக்க வானில் முக்கோண வடிவ உருவம் ஒன்று தோன்றியுள்ளதாக காட்டுகின்றது.

ஆரஞ்சு நிற ஒளியுடன் இருக்கும் உருவமானது, நெருப்பிற்குள் இருப்பது போன்று கண்ணுக்கு தெரிகின்றது. அந்த உருவத்தை, உற்று நோக்கினால் அதன் பின் ஒரு சாயல் இருப்பதாக தெரிகிறது என்றும், வினோத நிறங்கள் கொண்ட மேகமாக கூட இருக்கலாம் என்றும், உறுதியாக வானத்தில் பிரமிடு இருப்பது போன்றே தோன்றுவதாகவும், யூட்யூப் ஆராய்ச்சியாளர் வெளிப்படுத்த்தியுள்ளார்.

யுடியூபில், அந்த வண்ண பிரமிட் வடிவமானது அமெரிக்க வானில் தோன்றுவதை, எரியும் பிரமிடு என்றும், தீப்பிழம்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வானில் தோன்றிய பிரமிட் போன்ற உருவத்தை ,பிரபலமற்ற “டிஆர் -3 பி” உளவு விமானத்துடன் ஒப்பிட்டு நிபேசினார்கள். டி.ஆர் -3 பி உளவு விமானமானது, அமெரிக்க அரசாங்கத்தின் மூலமாக, உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. பலரும், இந்த பிரமிட் போன்ற வானில் தோன்றிய வடிவத்தை மலை உச்சி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அதன் உண்மைத் தன்மை பற்றி தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply