கர்தார்பூர் புனித யாத்திரை : பாஸ்போர்ட் இல்லாத பயணத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு

8 November 2019, 8:27 pm
PAK-UPDATENEWS360
Quick Share

சீக்கிய மதத்தின் மத குருவான, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் நினைவு தினத்தை போற்றும் விதமாக கர்தார்பூர் குருத்வாராவிற்கு, புனித பயணம் மேற்கொள்கின்றார்கள்.

நவம்பர் 1-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான, இம்ரான்கான், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு அதிரடியாக பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தார். கர்தார்பூருக்கு புனித பயணம் மேற்கொண்டு வரவிருக்கும், சீக்கியர்கள் தாங்கள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு, பாஸ்போர்ட் தேவையில்லை என்றும், செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது என்றும் தெரிவிதித்திருந்தார்.

கர்த்தார்பூர் வழித்தடம் துவங்கப்படுகின்ற நாளில், கர்த்தர்பூர் நெடுஞ்சாலை கட்டணத்திலிருந்து விலக்கு தரப்படும் என்றும் அறிவித்திருந்தார். கர்தார்பூருக்கு செல்கின்ற முதல் இந்திய சீக்கியர் குழுவில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்திப்சிங் பூரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

கர்தார்பூருக்கு சீக்கியர்கள் மேற்கொள்ளவிருக்கும் புனித பயணத்திற்கு, பாஸ்போர்ட் தேவையில்லை என்று இம்ரான்கான் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியா அந்த அறிவிப்பை உறுதி செய்துகொள்வதற்கு பாஸ்போர்ட் விஷயம் பற்றி கேள்வி எழுப்பியது. ஆனால், இம்ரான் கான் அறிவித்த முடிவுமிகு பாகிஸ்தான் நாட்டின் ராணுவமானது, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாகிஸ்தான் நாட்டின், ராணுவ செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவிக்கையில், நாங்கள் பாதுகாப்பு இணைப்பை கொண்டுள்ள காரணத்தால், கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வருவது சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு, மற்றும் இறையாண்மை போன்ற விவசாயங்களில், சமரசம் செய்து கொள்வாஹர்க்கு இணங்க இயலாது என்றும், திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

Leave a Reply