சென்னை பெண்ணே .. பாராட்டு உந்தன் முன்னே …!

19 November 2019, 8:33 am
IS-UPDATENEWS360
Quick Share

தமிழகத்தின் சென்னை நகரத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று அதன் பின்னர் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான, இந்திரா நூயியின் உருவ படம், அமெரிக்காவில் இருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய உருவப்பட கலைக்கூட அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

அமெரிக்க நாட்டின் வரலாறு, வளர்ச்சி மற்றும் கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க வகையிலான மிக முக்கிய அரிய பங்களிப்புகளை செய்தவர்களின் உருவப் படங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் கலைக்கூடமாக திகழ்கின்ற சிறப்பு மிக்கதானது ஸ்மித்சோனியன் கேலரி ஆகும். 1962-ம் ஆண்டில், ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், பிரபல நடிகர்கள் போன்ற பல துறைகளின் விற்பன்னர்களான பலரின் உருவ படங்கள், காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அருங்காட்சியகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற் கொண்ட படங்கள் இடம் பெற்று சிறப்பு சேர்த்து வருகின்றது.

பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தன்னுடைய உருவப் படத்தை, கலைக் கூடத்தில் சேர்க்கப்பட்டு இருப்பது பற்றியும், இந்திரா நூயி கூறியிருப்பது, தான் இது வரையில் கனவில் கூட கண்டிராத ஒரு பாராட்டாக இந்த அங்கீகாரம் இருப்பதாக நன்றி பாராட்டியிருக்கின்றார்.

தெற்கு ஆசியா பிராந்தியத்திலிருந்து, வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பானது வழங்கப்பட்டு இருக்கின்றது. தன்னுடைய எந்தவிதமான பின்னணி, நிறம், மதம், இனம் என்பது குறித்த முக்கியத்துவம் இல்லாமல், உலக அளவில் பல நாடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றியும், அவ்வாறு செயலாற்றுபவர்களை பற்றியும் கொண்டாடும் நாடாக அமெரிக்க நாடு இருக்கின்றது என்றும், அமெரிக்க தேசத்தில் இருப்பது, வாழவைத்து பற்றி தான் மிகுந்த நன்றியுள்ளவளாக உணர்வதாகவும் இந்திரா நூயீ தனது நன்றியினை உணர்வு போங்க வெளிப்படுத்தியிருக்கின்றார்.