முதன்முறையாக நடைபெற்ற ராணுவத் தளவாடங்கள் கண்காட்சிக்கு எதிர்ப்பு

19 November 2019, 8:29 am
Japan Exhibitoin-Udpatenews360
Quick Share

ஜப்பான் : சர்வதேச ராணுவத் தளவாடங்கள் கண்காட்சி ஜப்பானில் முதல்முறையாக நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் அதிநவீன ராணுவ வாகனங்கள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் ,இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளவாடங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த அரிய வகை கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பார்வையிட்டனர். இதனிடையே, ராணுவக் கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்டவை உடனடியாகத் தலையிட்டு கண்காட்சியை நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.